உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்களுக்கு பரவும் வெறிநோய்: கட்டுப்படுத்த செயலர் உத்தரவு

நாய்களுக்கு பரவும் வெறிநோய்: கட்டுப்படுத்த செயலர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''தமிழகத்தில், நாய்களுக்கு பரவி வரும் வெறிநோயை கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் நல வாரியம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, தமிழக கால்நடைத்துறை செயலர் சுப்பையன் தெரிவித்தார்.சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், 'செல்லப் பிராணிகளுக்கான நவீன சிகிச்சை முறைகள்' தொடர்பாக, மூன்றாவது தேசிய அளவிலான, இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது. இதில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன்துறை செயலர் சுப்பையன், கருத்தரங்க மலரை வெளியிட்டு பேசியதாவது:செல்ல பிராணிகள், நம் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுகின்றன. அவற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மனிதர்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது, நாய்களுக்கு பரவி வரும் வெறி நோயை கட்டுப்படுத்தவும், செல்லப்பிராணிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும், கால்நடை மருத்துவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விலங்குகள் நல வாரியம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் கூறுகையில், ''இப்பல்கலை பேராசிரியர்கள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, சிறந்த சிகிச்சை வழங்கி வருகின்றனர். ஜெர்மன் நாட்டுடன், கால்நடை மருத்துவத்தில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது,'' என்றார்.கருத்தரங்கில், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலை சிகிச்சையியல் இயக்குனர் அனில் குமார், கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், துறை பேராசிரியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

angbu ganesh
மார் 07, 2025 14:22

பதவி வெறி அதிகார வெறி பிடிச்ச கழகத்துக்கு ஏதாச்சும் வச்சி இருக்கா


Vivekanandan Mahalingam
மார் 07, 2025 10:15

தெரு நாய்களிலும் ஊழல் - தெரு நாய்களை பராமரிப்பதற்காக ஒரு NGO பணம் பெறுகிறது - எவ்வளவு பெறுகிறது - எங்கு செலவிட படுக்கிறது என்று தெரியாது - மேலும் மாநகராட்சி தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அதே இடத்தில திரும்பி விட்டுவிடுகிறார்கள் - பல நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை - மேலும் விடியல் அரசுக்கு நாய்க்கடி, நாயினால் ஏற்படும் விபத்து பற்றி எந்த கவலையும் கிடையாது - அவர்கள் வீட்டிலருகே நாய்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் மாநகராட்சி - சாதாரண மனிதனை பற்றி எந்த கவலையும் இல்லாத விடியல் ஆட்சி


rama adhavan
மார் 07, 2025 09:36

ப்ளூ கிராஸ் என்னும் அமைப்பால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த பயனும் இல்லை. இருந்தால் தெரிவிக்கவும். இந்த அமைப்பை ஊழியர்களை தவிர்த்து அந்தந்த உள்ளாட்சி, கால்நடை துறைகளிடம் மாற்றலாம்.


RAAJ68
மார் 07, 2025 07:55

பார்க்கவே பயமாக உள்ளது இப்படிப்பட்ட படத்தை போட வேண்டுமா.


orange தமிழன்
மார் 07, 2025 07:32

நோய்வாய் பட்ட மற்றும் அடிப்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் எடுத்து செல்ல மாட்டேன் என்கிறார்கள், ப்ளூ கிராசுக்கு தகவல் கொடுக்க சொல்கிறார்கள்.....அவர்கள் எப்பொழுது வண்டி இருக்கிறதோ அப்பொழுதுதான் வருகிறார்கள் அதுவரை நோய்வாய் பட்ட விலங்குகள் அப்படியே தான் இருக்கும் அல்லது இறந்து விடும்.....இதற்கு மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி