உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்போ பரவாயில்ல.. அப்போ ரொம்ப மோசம்: பாலியல் அத்துமீறல்கள் குறித்து ராதிகா பளீச்

இப்போ பரவாயில்ல.. அப்போ ரொம்ப மோசம்: பாலியல் அத்துமீறல்கள் குறித்து ராதிகா பளீச்

சென்னை: ''திரைத்துறையில் 80 காலகட்டத்தில் நடிகைகளுக்கு பல துன்புறுத்தல்கள் இருந்தது; இப்போது பல பெண்கள் தைரியசாலிகளாக இருக்கின்றனர். முன்பு நடந்ததுபோல் தற்போது பாலியல் அத்துமீறல் இல்லை'' என நடிகை ராதிகா கூறியுள்ளார்.கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக ராதிகா செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்: கேரவன் விவகாரம் குறித்து விளக்கம்தான் கூறினேன்; புகார் அளிக்கவில்லை. எல்லா துறைகளிலும் பிரச்னை உள்ளது. திரைப்படத்துறையில் முன்பு நடந்ததுபோல் தற்போது பாலியல் அத்துமீறல் இல்லை.

குரல் கொடுங்கள்

80 காலகட்டத்தில் நடிகைகளுக்கு பல துன்புறுத்தல்கள் இருந்தது; இப்போது பல பெண்கள் தைரியசாலிகளாக இருக்கின்றனர். தற்காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை தவறாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் பெரிய நடிகரால் பிரச்னை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். இதற்காக இன்று வரை அவர் என்னுடன் நட்பில் இருக்கிறார். தவறு செய்தவர்களை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்; தவறு செய்தால் தட்டிக் கேட்பேன்; அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

மவுனம் கலையுங்கள்

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை உள்ளது. உங்களின் மவுனம் தப்பாக தான் இருக்கும். பாலியல் அத்துமீறல் தொடர்பான தவறுகளை செய்யும் ஆண்களை சமூகத்தில் உயர்த்தி பார்க்கின்றனர். சர்வதேச அளவில் பெண்கள் பல சாதனைகளை செய்யும்நிலையில் நாம் இன்னும் இதை பற்றி பேச வேண்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் என்னிடம் பேசினார். நடிகைகளுக்கு நிகழும் பிரச்னைகள் குறித்து தீர்வுகாண கோரினேன். நடிகர் சங்கத்தினர் கூட்டம் கூட்டினாலே சம்பள உயர்வு பற்றிதான் பேசுகின்றனர்; இந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

அரசியலுக்கு வரும் நடிகர்கள்

முன்னணி நடிகர்கள், நடிகைகளின் மவுனம் தவறாக போய்விடும். ஆதரவு குரல் கொடுத்தால் உறுதுணையாக இருக்கும். நடிகர், நடிகைகளின் விஷயங்கள் குறித்து அவதூறாக பேசும் யூடியூபர்களை எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தடை செய்ய வேண்டும். நடிகைகளுக்காக போராடாத நடிகர்கள்தான் அரசியலுக்கு சென்று மக்களுக்காக போராடப் போவதாக சொல்கிறார்கள். தங்களுடன் நடிக்கும் நடிகைகளுக்காக போராடாத நடிகர்கள் மக்களுக்காக போராடுவார்களா? நடிகைகளுக்கான பாலியல் தொல்லை குறித்த நடிகர்களின் மவுனம் மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படும். நடிகைகளின் பிரச்னைக்கு நடிகர்கள் தான் முன்நின்று போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

tmranganathan
செப் 28, 2024 08:54

கேரளாவில் வேகமோன் என்னும் மலையில் ரெசார்ட்டுகள் உள்ளன. இங்குதான் பல இளம் பெண்கள் கூட்டிவரப்பட்டு பள்ளியில் துன்பத்திற்கு ஆளாகி பின்னர் நடிகைகளாக மாறுகிறார்கள். ஆண்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை


J.Isaac
செப் 03, 2024 08:25

சினிமா துறை ஒரு சாக்கடை என்பது உலகமே அறிந்ததே.குடிக்கும் புகைபிடித்தலுக்கும் காதலுக்கும் இளஞர்களை அடிமைப்படுத்தில் முக்கிய பங்கு சினிமாவுக்கே.


Ramesh Sargam
செப் 02, 2024 22:09

இப்போதும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது. சினிமாத்துறையில் மட்டுமல்ல, டிவி தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் இந்த பாலியல் தொந்தரவு நிறைய இருக்கிறது. ராதிகா ஏனோ மூடிமறைக்கிறார்.


l.ramachandran
செப் 02, 2024 20:19

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஹி ஹி


தமிழ்வேள்
செப் 02, 2024 19:52

திரைத்துறை உருவாவதற்கு முன்பே நாடகம் மற்றும் கூத்து கும்பல் கலை சேவை என்ற பெயரில் ஒழுக்க மீறல்களை சர்வ சாதாரணமான செய்து வந்தது அனைவரும் அறிந்ததே. . பாகவதர் கலைவாணர் வகையறா வழக்கில் மாட்டி உள்ளே போய் வந்தது கூட அதனால் தான். ஒழுக்கம் அற்ற காரணத்தால் தான் கூத்தாடிகளை ஊருக்குள் வரவிடாமல் தனி வீடு ஒதுக்குபுறமாக அமைத்து கொடுத்தனர் நமது முன்னோர்கள்.. திருவிழா நடைபெறும் காலம் தவிர மற்ற நாட்களில் கூத்தாடுதல் தவிர்க்க/ தடுக்க பட்டது ஒழுக்கமீறல்கள் பரவாமல் இருக்கவே..


Venkatesh Lakshminarayanan
செப் 02, 2024 18:56

80களில் ரகசிய கேமரா இருந்துச்சா ? வாய குடுத்து வம்ப வேலைக்கு வாங்கறாங்க , பாலியல் தொல்லை இருக்கு ஆனா இல்ல என்று விடவேண்டியது தானே


sankaran
செப் 02, 2024 18:31

மனசு மயங்கும்....மௌன கீதம் பாட்டு ஞாபகம் இருக்கா ... ராதிகா அவர்களே ... தனக்கு பணம் வேணும் ... பாலியல் குற்றங்களுக்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் ... அன்று தவறு செய்து விட்டு ...இன்று நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை ...


swamy
செப் 02, 2024 18:06

எ‌ந்த நடிகனும் யாரையும் காப்பாற்ற அரசியலுக்கு வரவில்லை.... சொத்து ஸ்வாமி.....


J.Isaac
செப் 02, 2024 17:56

பணம்,பணம்,பணம்.


Duruvesan
செப் 02, 2024 17:48

யாரு அம்மணி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை