மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை:பெங்களூரில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழையால், நேற்று முன்தினம் நள்ளிரவில், பெங்களூரில் தரையிறங்க முடியாத 10 விமானங்கள், சென்னைக்கு வந்து தரையிறங்கின.கர்நாடகா மாநிலம் பெங்களூரில், நேற்று முன்தினம் இரவு சூரைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால், பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 10 விமானங்கள், தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. அதாவது, சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், டில்லி, மும்பை, கோவா, ஹைதராபாத், ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூரு சென்ற 10 விமானங்கள், ஒன்றன் பின் ஒன்றாக, பெங்களூரில் தரையிறங்க முடியாமல் சென்னை வந்து தரையிறங்கின.சென்னை விமான நிலையத்தில் பயணியர் அனைவரும், அந்தந்த விமான நிலை பகுதிகளில் அமர வைக்கப்பட்டனர். பயணியருக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகளை, அந்தந்த விமான நிறுவனங்கள் செய்து கொடுத்தன. இதையடுத்து, பெங்களூரில் நேற்று அதிகாலையில் வானிலை சீரடைந்து விட்டதால், சென்னையில் இருந்து அந்த பத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றன.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago