உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமஜெயம் கொலை வழக்கு; அதிகாரிகள் மாற்றம்

ராமஜெயம் கொலை வழக்கு; அதிகாரிகள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளை சென்னை ஐகோர்ட் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, திருச்சி, தில்லை நகரில் நடைபயிற்சி சென்ற போது, கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி போலீஸ் முதல் சி.பி.ஐ., வரை விசாரித்தும், இதுவரையில் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jd9zkhcd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், இந்த வழக்கை சி.பி.ஐ., வசமிருந்து மாநில போலீஸாருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2022ம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள், போலீஸாரின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஆனால், சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ஜெயக்குமார் திருவாரூர் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட சென்னை ஐகோர்ட், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., மற்றும் தஞ்சை எஸ்.பி., ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கல்யாணராமன்
மார் 04, 2025 10:59

இன்னும் 25 வருடம் விசாரணை செய்யுங்கள். கொலையாளியை அடையாளம் கண்டு பிடித்தாலும் எல்லோரும் செத்து போய் இருப்பார்கள். லட்சக்கணக்கான ரூபாய் அரசு பணத்தை தண்ட செலவு செய்து வழக்கை ஊற்றி மூட சௌகரியமாக இருக்கும்.


sridhar
மார் 03, 2025 20:53

இரண்டு வித விசாரணைகள் உண்டு - உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று , உண்மையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று. ஆட்சியில் உள்ளவர்களுக்கு தேவையான படி நடக்கும்.


SUBBU,MADURAI
மார் 04, 2025 07:26

இந்த கொலையில் முதலில் விசாரிக்கப் பட வேண்டியவர் கொலையுண்டவரின் அண்ணனான கே.என்.நேரு..


K.n. Dhasarathan
மார் 03, 2025 20:36

சிறப்பு புலனாய்வு குழு எஸ். பி . ஜெயக்குமார் ஏன் மாற்றப்பட்டார் ? ஏன் இந்த வழக்கு இப்படி இழுக்கிறது ? வர வர மதுரை அய்ய்ம்ஸ் போல, ஆய்விட்டது, ஏன் விசாரணையில் தொய்வு ? சும்மா பெஞ்சை தேய்ப்பவர்களா ? கண்டறிந்து பணியிடை நீக்கம் செயுங்கள், சும்மா இடம் மாறி அங்கும் போயி பெஞ்சை தேய்க்கவா ? தண்டனைதான் ஒரே வழி தயவு செய்து ஆர்வமாக வேலை செய்பவர்களிடம் கொடுங்கள். மக்களுக்கு நீதி துறை, காவல் துறை மீது நம்பிக்கை வருமா ? பதில் சொல்லுங்கள் அதிகாரிகளே


V. Kanagaraj
மார் 04, 2025 10:23

அரசு நினைத்தால் மட்டுமே விசாரணை சரியாக நடக்கும். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த விசாரணை நடக்கிறது. காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வில்லை என்றால் இந்த விசாரணை இன்னும் பல வருடங்கள் நீண்டு கொண்டே போகும்


sankaranarayanan
மார் 03, 2025 20:27

இராமர் என்றோ சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சென்றுவிட்டார் இனி அவரை போலீசு வலை வீசி அங்கே சென்றுதான் விசாரிக்க வேண்டும்


Srinivasan Ramabhadran
மார் 03, 2025 20:18

இப்பொழுது என்ன அவசரம். இன்னும் ஒரு 10 ஆண்டுகள் கழித்து விசாரணை தொடங்கலாம். அதற்குள் உண்மை குற்றவாளிகள் கூட அவர்களின் ஆயுட்காலம் முடிந்து இயற்கையாக மரணம் எய்து விடுவர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது நம்பும் படியாகவா இருக்கிறது.


N Srinivasan
மார் 03, 2025 20:04

மறந்தே பொச்ச்சு ரொம்ப நாளாச்சு .......


raja
மார் 03, 2025 19:28

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க அநியாயம் போன கதை யாருக்கும் தெரியாது.


Bye Pass
மார் 03, 2025 19:23

கன்னித்தீவு சிந்துபாத் கதை மாதிரி முடிவுக்கு வருமா ?


sankaran
மார் 03, 2025 19:07

.. மேலிடத்து விஷயம் வெளியே வராது...


Nagarajan D
மார் 03, 2025 19:05

செத்தவன் மறு பிறவி எடுத்து வந்திருப்பான் இப்ப அவனுக்கும் 15 வயதாகியிருக்கும்... என்ன விளங்காத நீதித்துறையோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை