உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்; பா.ம.க., பிரமுகர். கடந்த, 2019 பிப்., 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை என்.ஐ.ஏ., சார்பில், திருப்பூரின் பல பகுதிகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், 'ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர், திருப்புவனம், முகமது அலி ஜின்னா, 37, மேலக்காவேரி, அப்துல் மஜீத், 40, பாபநாசம், புர்ஹானுதீன், 31, திருவிடைமருதுார், ஷாஹீல்ஹமீத், 30, திருமங்கலக்குடி, நபீல்ஹாசன், 31, ஆகியோர்.இவர்கள் குறித்த தகவல் தருபவருக்கு, நபர் ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை சன்மானமாக வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 'தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 99623 61122; இ-மெயில்: infoche.gov.in' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஜூலை 29, 2024 11:26

ஆபத்தானவர்களாகச் சித்தரிக்கிறது மீடியா .........


shanker Ramaswamy
ஜூலை 29, 2024 10:53

NIA எடுத்த பின்புதான் கேஸ் வெளிய தெரியுது


Dharmavaan
ஜூலை 29, 2024 10:04

இது கண்துடைப்பு நாடகம் இதை NIA விடம் ஒப்படைக்க வேண்டும்


shyamnats
ஜூலை 29, 2024 09:06

தமிழக ஸ்காட் லேண்ட் போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பொது மக்கள் கேள்வி கேட்கிறார்கள். வாட்சப்பில் செய்தி பதிவிடுபவரை நடு இரவில் கைது செய்ய வே நேரமில்லை எனவும் சிலர் கவலை.


sankaranarayanan
ஜூலை 29, 2024 06:04

ஐந்து வருடங்களாகவா ஒரு துப்புகூட இவர்களுக்கு கிடைக்கவில்லை இவர்கள்தான் லண்டன் போலீசுக்கு சமம் பலவிதமான படைகளை அனுப்பி அனைவரையுலம் பிடித்துவிடுவோம் என்கிறார்களே


மேலும் செய்திகள்