சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க பரிந்துரை
பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: தமிழகத்தில் உள்ள தொன்மையான முருகன் கோவில்களை தேர்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது, முதற்கட்டமாக 143 முருகன் திருக்கோவில்களில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் துவங்குவது.முருகன் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள். பூசாரிகள், ஓதுவார்கள், கலைஞர்கள், முருகன் அடியார்களை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் 10 நபர்களுக்கு விருதுகள் வழங்குவது.அறுபடை வீடு திருக்கோவில்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி திருவிழாக்கள் நடத்துவது.அறுபடை வீடு பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 2024- 25ம் ஆண்டில் 1,000-லிருந்து 1,500-ஆக உயர்த்துவது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழனியில், 'வேல்' நிறுவுதல்.முருக வழிபாட்டிற்கு உகந்த கடம்ப மரக்கன்றுகள் மற்றும் அரிய வகை மரக்கன்றுகளை முருகன் கோவில்களில் நட்டு பராமரிப்பது.வெளிநாட்டில் வாழும் முருக பக்தர்கள் தமிழகத்திற்கு வரும்போது அவர்களுக்கு அறுபடை வீடு திருக்கோவில்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்தல்தமிழர் சித்த மருத்துவத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றிடவும், தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.