உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்

முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்

சென்னை:அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், 1,423 எம்.பி.பி.எஸ்., - 1,566 பி.எடி.எஸ்., இடங்கள் மீதம் உள்ளன.அதாவது, தமிழக அரசு கல்லுாரிகளில், 75 இடங்கள் உட்பட, சுயநிதி கல்லுாரிளுடன் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு, 397 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 704 பி.டி.எஸ்., இடங்கள் மீதம் உள்ளன. மேலும், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், 23 பி.டி.எஸ்., - மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 2 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,024 எம்.பி.பி.எஸ்., - 839 பி.டி.எஸ்., இடங்கள் என, மொத்தம், 1,423 எம்.பி.பி.எஸ்., - 1,566 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், https://tnmedicalselection.net/ என்ற இணையளத்தில் துவங்கியுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த, 28,819 பேரும்; நிர்வாக ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த, 13,417 பேரும் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 13ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.பின், 14ம் தேதி நண்பகல் 12:00 மணி முதல், 16ம் தேதி மாலை 5:00 மணி வரை விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். இட ஒதுக்கீடு விபரம், 19ம் தேதி வெளியிடப்படும். வரும், 26ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ