உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தகர்த்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, 'பிக்கி' சார்பில், 'அதிகாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து, வளர்ச்சி அடையும் பெண்கள்' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் என, அனைத்து துறைகளிலும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது.

பெண்கள் நலன்

பெண்கள் முன்னேற்றம் அடையாமல், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல், நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது. அதை உணர்ந்து, பிரதமராக மோடி பதவியேற்றது முதல், பெண்கள் நலனை மையப்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே, 12 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு; 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு; 17 கோடி பெண்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளன.பெண்கள் சொந்தக்காலில் நிற்க, அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீஸ் நிலையங்களில் மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள், 10 பெண் காவலர்கள் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், 866 விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 410 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றங்கள். இதனால், 2.53 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

நிகழ்ச்சியில், பிக்கி பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா அபிஷேக், நிர்வாகி சுதா சிவகுமார் ஆகியோர், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''அரசியல்வாதிகள் எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாக சொல்லி விடுவர். எனக்கு சமைப்பது, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நேரில் சென்று வாங்குவது பிடிக்கும். அப்படி, சென்னையில் காய்கறிகள் வாங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
செப் 05, 2024 20:22

இவர் தமது முன்னேற்றத்தை சொல்கிறார் போல் உள்ளது!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 10:18

விமர்சிக்கிறவங்க, கேள்வி கேட்டு மடக்குறவங்க பக்கமே போகமாட்டார் அம்மையார் ....


பாமரன்
செப் 05, 2024 09:25

ஓஹோ நிம்மியே சொல்லிட்டாங்களா...


Mario
செப் 05, 2024 09:16

இதெல்லாம் சரி மணிப்பூர் எப்ப போறிங்க


Hari
செப் 05, 2024 10:37

After kallakurichi by your head.. London Kothadimai


Sampath Kumar
செப் 05, 2024 08:08

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆனா தடையை நீக்கி உள்ளது அய்யா ஜி ஆட்சியாது தான் உங்க மாதிரி ஆட்கள் புறவாசல் வழியாக வந்து உக்கார வைத்து உள்ளாரே தில் இருந்தே புரிகிறது போவியா


Duruvesan
செப் 05, 2024 06:27

ஆக அய்யனுங்க மட்டுமே வளருகிறார்கள் என சொரியனின் அடிவருடிகள் பொங்கல்


Kasimani Baskaran
செப் 05, 2024 05:55

இந்தியாவின் நிதியமைச்சர் ஒரு தமிழ் பெண் என்பது அனைவருக்கும் பெருமை. திராவிடர்கள் தமிழர்கள் இல்லை என்பதால் அதை ஒரு பெருமையாகவே கருத மாட்டார்கள். கூடுதலாக வெறுப்பை உமிழ்வதில் நிபுணர்கள்.


Sundar P
செப் 05, 2024 03:02

இந்த செய்தி உண்மையா?


புதிய வீடியோ