உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிசிக்கு வரி விதிக்கும் சட்ட திருத்தம்: கைவிட வணிகர்கள் கோரிக்கை

அரிசிக்கு வரி விதிக்கும் சட்ட திருத்தம்: கைவிட வணிகர்கள் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், 25 கிலோ வரை எடையுள்ள, 'பேக்கிங்' செய்யப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.வரி விதிப்பை தவிர்க்க, மேற்கண்ட உணவு தானியங்கள், 26 கிலோ, 30 கிலோ எடையில் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.மத்திய அரசு, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளது. இதனால், 26 கிலோவுக்கு மேல் பாக்கெட்டில் உள்ள தானியங்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய தானியங்களின் விலை உயரலாம்.எனவே, எடையளவு சட்ட திருத்தத்தை கைவிடுமாறு, மத்திய அரசுக்கு தமிழக வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானப்படி, 25 கிலோவுக்கு கீழ் உள்ள அத்தியாவசிய உணவு தானியங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி., தற்போது 26 கிலோவுக்கு மேல் என்று மாற்றப்பட உள்ளது. இதனால், அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி., வந்து விடும்.இதனால், ஏழைகள் பாதிக்கப்படுவர். எனவே, அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும். இது குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதிகரேவிடம் வலியுறுத்தினோம்.அவர் மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளிக்கவில்லை. எனவே, எடையளவு சட்ட திருத்தம் செய்யக்கூடாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதே கோரிக்கையை, தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன நிர்வாகிகள், சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையையும் சந்தித்து வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Aroul
ஆக 09, 2024 21:26

விவசாயிகளிடம் நேரடியாக வாங்குங்க.


ES
ஆக 09, 2024 16:18

Pathetic to put gst for Rice utter disgrace


Sivagiri
ஆக 09, 2024 12:22

சில்லறையாக விற்கும் சரக்குகளுக்கு, நுகர்வோரிடம் ஜிஎஸ்டி வசூலித்து அரசுக்கு கட்டணும், மக்களுக்கும் கொஞ்சூண்டு ஜிஎஸ்டி கட்டியது தெரியாது - ஆனால் வியாபாரிகள்? இந்தியாவில் உள்ள எந்த வியாபாரியும் வசூலித்த ஜிஎஸ்டியை காட்டுவதே இல்லை, எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி தப்பித்து விடுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில்லறை வியாபாரத்திற்கு ஜிஎஸ்டி வசூலித்து வைத்துக் கொள்வார்கள் - மொத்த வியாபாரத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது - - எப்படி? . . இதை அப்டியே திருப்பி போட்டால் , மக்களுக்கு எளிது , வியாபாரிகளுக்கு கஷ்டம் - மொத்தமாக விற்கும் சரக்குகளை ஜிஎஸ்டியில் இருந்து தப்பிப்பது கொஞ்சம் சிரமம் ? . . .


Swaminathan L
ஆக 09, 2024 11:51

ஓரளவு சுமாரான தரம் உள்ள சாப்பாட்டுப் பச்சரிசி கிலோ அறுபது, எழுபது ரூபாய் தாண்டியாகி விட்டது தமிழகத்தில். ஆந்திரா, கர்நாடகா சரக்கு என்கிறார்கள். கோவிட் தொற்றும் பிரச்சினை தொடங்கி விலையேற்றம் பயங்கரம். இத்தனைக்கும் இருபத்தாறு கிலோ மூட்டைக்கு ஜிஎஸ்டி இல்லாமலே இந்த விலை. ஏன் இந்த விலை என்று வணிகர்கள் விளக்கவில்லை. ஜிஎஸ்டி என்றால் சாமான்யருக்கு பணப் பிரச்சினை. வணிகருக்கு வேறு பிரச்சினை.


Sampath Kumar
ஆக 09, 2024 08:58

இந்த கேடுகேட்ட பிஜேபி அரசு பிளாட்டினத்துக்கு ஜெ எஸ் டீ 14 சதவிகிதம் விதிக்கிறது அனால் எல்.ஐ.சி பாலிசி தர்ணாவுக்கு 28% விதிக்கிறது மனிதவாழ்க்கை எதனை கேவலமாக பட்டு விட்டது இந்த அரசு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன விட்டால் மனித ...க்கும் வரி போடுவார்கள் கேக்க நாதி இல்லை அதுனால தான் இந்த ஆட்டம்


ஆரூர் ரங்
ஆக 09, 2024 09:34

இன்ஷூரன்ஸ் க்கு சேவை வரி விதித்தது சிதம்பரம். அதுதான் ஜிஎஸ்டி யுடன் இணைக்கப்பட்ட போதும் அதன் பிறகும் அதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் திமுக எதிர்க்கவில்லை. இப்போ தனது தவறை மறைக்க நாடகப் போராட்டம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 14:51

ஜிஎஸ்டியில் தமிழகமும் உறுப்பினர் ஜிஎஸ்டி வரி அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட படி தான் மத்திய அரசு வரி நிர்ணயம் செய்கிறது. தமிழகம் உட்பட இண்டி கூட்டணி அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆட்சேபனை செய்து எதிர்த்தால் வரி வராது. எதெதற்கு எவ்வளவு வரி வேண்டும் என நிர்ணயம் செய்து கொள்ளலாம். மேலும் ஜிஎஸ்டி என்பது எந்த மாநிலத்தில் வசூலிக்கபடுகிறதோ அந்த மாநிலத்திற்கு வராது. எந்த மாநிலத்திவர் சரக்குகளை வாங்குகிறார்களோ அந்த மாநிலத்திற்கு தான் வரி போகும். உத்தரபிரதேசத்தில் இருக்கும் ஒருவர் தமிழகத்தில் இருந்து பொருட்களை வாங்கும் பட்சத்தில் அதில் தமிழகத்தில் வசூலிக்கப்படும் வரி உத்திரபிரதேச மாநிலத்திற்கு செல்லும். அதே போல் குஜராத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து தமிழகத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் பொருட்கள் வாங்கினால் அதற்கு உண்டான ஜிஎஸ்டி வரி குஜராத்தில் வசூலிக்கப்பட்டு தமிழகத்திற்கு தரப்படும். ஆகவே தமிழகத்தில் இருந்து எந்த எந்த பொருட்கள் அதிகமாக மற்ற மாநிலங்கள் வாங்குகிறார்களோ அந்த அந்த பொருட்களுக்கு குறைந்த வரி விதிப்பு செய்யவும் அதே சமயம் எந்தெந்த பொருட்கள் மற்ற மாநிலங்கள் இருந்து தமிழகம் அதிகமாக வாங்குகிறதோ அதற்கு அதிக வரி விதிப்பு செய்தும் ஜிஎஸ்டி கவுன்சில் முறையிட்டு மற்ற மாநிலங்களோடு இணக்கமாக இருந்து அதற்கு சம்மதிக்க வைத்து தமிழகத்தின் வருமானத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் குறைந்த வரிவிதிப்பு என்றால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பு அதிகமாகும். ஜிஎஸ்டி வருமானம் தமிழகத்தில் அதிகமாகும். இதற்கு முக்கியம் அனைத்து மாநிலங்களும் பொது மொழியான ஹிந்தி நன்கு தெரிந்திருக்க வேண்டும். மற்ற மாநிலத்தவரோடு இணக்கமான உறவு பேண வேண்டும். எடுத்ததெற்கு எல்லாம் கோர்ட் போக கூடாது. மற்ற மாநிலத்தவரோடும் மத்திய அரசோடும் இணக்கமாக இருக்க கவர்னரை பயன்படுத்தி கவர்னர் மூலமாக காரியங்கள் சாதித்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு காரணோடு சண்டை போட்டு கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி என்றும் இருக்காது.


Sri
ஆக 09, 2024 08:56

விவசாயிகளுக்கும் இடை தரகர் கமிஷன்களும் ஒழுங்கு படுத்த பட்டால் மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் போன்றவை சரியான விலையில் கிடைக்கும் நாடு சுபிட்சமாக இருக்கும்...ஆனால் வாக்கு வங்கி அரசியலால் சீரழிந்து வருகிறது சந்தை பொருளாதாரம்


அப்பாவி
ஆக 09, 2024 08:30

பின்னே எப்பிடித்தான் உருவுவது?


Kasimani Baskaran
ஆக 09, 2024 07:19

சில்லறையாக வாங்கும் பொழுது ஜிஎஸ்டி கிடையாது. ஆகவே மூட்டையாக விற்காமல் சில்லறையாக பேக் செய்தால் வரி கிடையாது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 11:13

நாம் அனைவருமே, உங்களையும் சேர்த்து மாதத்திற்கான உணவுப்பொருட்களை வாங்குபவர்கள்தானே அன்றி அன்றாடத் தேவைக்கு தினசரி அரை கிலோ என்று வாங்குவது கிடையாது மேலும் இந்த அரிசிக்கு வரிவிதிப்புக்கும் முட்டு கொடுப்பது கேவலம். இந்த னிலை தொடர்ந்தால், நாளை அல்லது அடுத்த பட்ஜெட்டில் அரிசியை சமைக்கவும் சாப்பிடவும் வரி போடுவார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 13:04

வியாபாரிகள் மொத்தமாகத்தான் வாங்குகிறார்கள். அவர்கள் செலுத்தும் வரியை பன்மடங்காக்கி இலாபத்துடன் சில்லறையாக வாங்குவோர் மீது நிச்சயமாகத் திணிப்பார்கள். ஆக சில்லறையாக வாங்கினாலும் நீங்கள் தப்பிக்க முடியாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ