உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.99 லட்சம் : பா.ஜ., அறிவிப்பு

ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.99 லட்சம் : பா.ஜ., அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'பிரதமர் மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று, பா.ஜ., சார்பில், திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.தமிழக பா.ஜ., சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, இதுகுறித்து தெளிவுபடுத்தி கையெழுத்து பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயலர் கார்த்தி, ஆன்மிக பிரிவு மாவட்ட துணை தலைவர் ஓசை சிவா ஆகியோர் சார்பில், திருப்பூரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அந்த போஸ்டரில், 'மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். முதல் மொழி - தமிழ்வழிக் கல்வி கட்டாயம், இரண்டாம் மொழி - ஆங்கிலவழிக் கல்வி, மூன்றாம் மொழி - மாணவர்களின் விருப்பத் தேர்வு. தி.மு.க., மந்திரி மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்க கூடாதா; சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிடைக்கும் கல்வி, அரசுப் பள்ளி மாணவனுக்கு கிடைக்கக் கூடாதா?' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 119 )

K V Ramadoss
மார் 31, 2025 15:41

ஏன் இருமொழி, ? ஒரு மொழியே போதுமே ஆங்கிலத்தை ஏன் திணிக்க வேண்டும் ?


Venkatesh
மார் 16, 2025 07:38

சங்கியின் மண்டையில் ..இல்லை என்று தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தால் இரண்டு ருவா சன்மானம் .


A. BYLON
மார் 14, 2025 22:47

Samagra Shiksha Scheme என்று திட்டத்தின் பெயரே இந்தி திணிப்பு தான். Samagra எனும் சொல் இந்தி தானே? இந்தி தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் புரியுமா?


K V Ramadoss
மார் 31, 2025 15:36

கருணாநிதி, உதயநிதி, இன்பநிதி இந்த பெயர்களெல்லாம் எந்த மொழியிலிருந்து வந்தன ? இவைகளும் அந்த மொழித் திணிப்பால் வந்தவையா ?


Anantharaman Srinivasan
மார் 11, 2025 12:45

உன் ஆறு கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். எனவே நீயே பதிலெழுது.


Nallavan
மார் 10, 2025 15:05

99 லட்சம் சம்பாரிக்க வழிகள் 1 தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு சரளமாக தமிழ் எழுத படிக்க பேச தெரியும்? 2 எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் எழுத படிக்க பேச தெரியும்? 3 ஆங்கிலத்தில் எத்தனை ஏழை மாணவர்கள் தேர்ச்சி அடைகிறாக்கள் ? 4 மூன்றாவது மொழியில் ஹிந்தி அல்லது வேறு மொழியில் படிப்பவர்கள் அம்மொழியில் தேர்வு உண்டா ? இல்லையா ? 5 அதிலும் வெற்றிபெறாத பட்சத்தில் மேற்படிப்பு எவ்வாறு படிப்பது? 6 ஹிந்தி அல்லது வேறு மொழி தெரிவதால் என்ன பயன் ?


chandra Mouli
மார் 10, 2025 05:45

பாட்டா விளம்பரம் போல ல இருக்கு இவகா ஆபர்


theruvasagan
மார் 09, 2025 17:04

லட்சத்தி சொச்சம் பள்ளிகளில் ஒரே வாத்தியார் வகுப்பு. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மாநில அரசிடம் துட்டில்லை. அப்ப கல்வி இலக்குகளில் 2030 ல் அடைய வேண்டிய இலக்குகளை நாங்க இப்பவே அடைந்துவிட்டோம் என்று நேத்திக்கு பீத்திக் கொண்டது இந்த எழவைத்தானா.


Manoharan
மார் 09, 2025 17:01

ஏன்டா எல்லாரும் அண்ணாமலை மாதிரியே இருக்கிறிங்க


muthu
மார் 09, 2025 16:59

When all other north indian states have english, then why Tamilnadu has to learn 3 rd language unnecessary


Anantharaman Srinivasan
மார் 11, 2025 12:57

I you fish learn third language otherwise குண்டிசட்டி குதிரை போல் தமிழ்நாட்டை சுற்றி வா. இந்தி தெரிந்தால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகலாம். தமிழகயரசு உனக்கு வேலை கொடுக்குமா..?


Manoharan
மார் 09, 2025 16:59

டீ குடிக்க காசில்லாதவன் போஸ்டர் இது. தூ


சமீபத்திய செய்தி