உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்புதாளையில் பாய்மர படகு போட்டி

நம்புதாளையில் பாய்மர படகு போட்டி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாய்மரப்படகு போட்டி நடந்தது.நம்புதாளை, தொண்டி போன்ற பல்வேறு ஊர்களை சேர்ந்த 26 படகுகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. ஒரு படகில் ஆறு வீரர்கள் இருந்தனர். கடல் மைல் 10 கி.மீ., என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.வாண வேடிக்கையுடன் போட்டி துவங்கியது.நம்புதாளை அம்பலம் படகு முதலிடம் பெற்று ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வென்றது. தொண்டி புதுக்குடி இளஞ்சியம் படகு இரண்டாம் இடம் பெற்று ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகையும், அதே ஊர் நடராஜன் படகு 3ம் இடம் வந்து ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ