உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆண்டாக ஒரே இடத்தில் வசிப்போருக்கு விற்பனை பத்திரம்: வாரியம் நடவடிக்கை

10 ஆண்டாக ஒரே இடத்தில் வசிப்போருக்கு விற்பனை பத்திரம்: வாரியம் நடவடிக்கை

சென்னை: நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து வரும் குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்க உள்ளது.தமிழக நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அந்த நிலங்களை வீட்டு மனையாக ஒதுக்க அரசு முடிவு செய்தது. இதற்காக, 1977ல் சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், 1988ல் தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் துவக்கப்பட்டது.இதில், மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்தி முடித்த நிலையில், அவர்களுக்கு தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விற்பனை பத்திரம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்துக்கு பயன்படுத்திய நிலங்களின் உரிமையை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், இத்திட்ட பயனாளிகளில் பெரும்பாலானவர்கள் விற்பனை பத்திரம் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த, நிர்வாக ரீதியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இத்திட்ட பகுதிகளில் முறையான ஒதுக்கீட்டு ஆணையின்றி புதிதாக குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கும் விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கான பகுதிகளில், புதிதாக மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, இத்திட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்த குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்படும். இதன் அடிப்படையில் தகுதி உள்ள குடும்பங்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Uthirakumar Balakrishnan Nadar
மே 10, 2024 06:52

கண்டிப்பா நல்ல விஷயம் ஆனா திராவிடியன் அவனுக்கு எந்த பயனு இல்லாம இத பன்னமான்டா அவனுடைய பயனால மக்களுக்கு ஆபத்துதான்


Jaihind
மே 10, 2024 12:37

???????


RAJENDRAN J
மே 09, 2024 10:27

ஏழைகள் வீடியோக்கள் கிடைப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது


Indian
மே 09, 2024 09:08

திராவிடமாடல் சரியில்லை சரியில்லை என்று சொல்லிக்கொண்டு அவர்களையே வெற்றிபெற வைக்கும் மக்கள் கையில் தான் இதற்க்கான தீர்வு இருகின்றது


ஆரூர் ரங்
மே 09, 2024 09:01

ஆட்சேபணை இல்லாத பகுதிகள் என்பதை நிர்ணயிப்பது ஆளும் அரசே. யார் பத்தாண்டுகளுக்கு மேல் குடியிருக்கிறார் என்பதை ஆளும் கட்சி கவுன்சிலர்கள் தீர்மானிக்கும் நிலையும் உண்டு. ஆக இது தேர்தல் செலவை திருப்பியெடுக்கும் வழியோ என்னவோ?


jayvee
மே 09, 2024 08:28

நீதி தேவதை குறட்டை விட்டு தூங்கும் நேரமிது ஏற்கனவே கண்ணை கட்டிவிட்டது ஒருபுறம் நடுநிலைமை தவறாமல் இருப்பதற்காக என்று சொன்னாலும் இப்படி அரசு நிலத்தை பொது மக்களுக்கு என்ற பெயரில் கட்சியினருக்கு தாரைவார்ப்பது திமுகவின் பரம்பரை வழக்கம்


தநாவின் பரிதாபம்
மே 09, 2024 08:08

சமானியனுக்கு ஒன்றும் கிடைக்காது. வட்டம், மாவட்டம், பகுதி, தொகுதி .... போன்றவர்களுக்கு தாரை வார்த்து, சாமானியன் வதைக்கப்படலாம்


GMM
மே 09, 2024 07:35

முறையாக ஒதுக்கீடு ஆணை இன்றி குடியேறியவர்களை அங்கீகரிக்க திமுக நிர்வாகத்திற்கு எங்கு அதிகாரம் உள்ளது? பத்து ஆண்டுகள் வசிப்பதை எப்படி அறிய முடியும்? ஏற்கனவே வீடு இருப்பதை அறிய வேண்டாமா? நில அபகரிப்பு? விற்பனை பத்திரம் தாசில்தார் பெயரில் இணைந்து இருக்க வேண்டும் குடியிருப்பு, விவசாய, காலி இட விவரங்கள் சுதந்திரம் பின் ஆன்லைன் மூலம் வரிசையாக உடமையாளர் விவரம் முதலில் வெளியிட வேண்டும் சலுகைகள் கொடுத்தவருக்கு அரசியல் காரணமாக திரும்ப திரும்ப சலுகை கொடுக்க படலாம் முறையாக ஒதுக்கீடு பெற்றவர் ஏமாளியா?


Kasimani Baskaran
மே 09, 2024 07:11

பொதுமக்களை பிழிந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் அதனால்த்தான் சரித்திரத்தில் தீம்கா இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை பிழிகிறார்கள் ஆயிரம் கொடுத்து பத்தாயிரம் எடுப்பது திராவிட மாடல்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ