உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து, பனை பொருட்கள் விற்பனையிலும், ஆவின் நிறுவனம் களமிறங்க உள்ளது.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. மாநிலம் முழுதும், 40 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை தற்போது, 26 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. இதனால், பால் பொருட்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது.இந்நிலையில், பனை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டி சுக்கு மிட்டாய் மட்டுமின்றி, தேன் விற்பனையிலும் களமிறங்க, ஆவின் நிர்வாகம் தயாராகி வருகிறது.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆவின் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, பனை பொருட்கள் விற்பனையில் இறங்கினால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும்; அரசிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் கருதுகிறது. பனை பொருட்கள் விற்பனையில், ஆவின் கவனம் செலுத்துவது நல்லது தான். அதே நேரம், அவை நிர்வாக நலன், விவசாயிகள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mohan vedhachalam
மே 21, 2024 10:55

முதலில் தயாரிப்பில் இருக்கும் பொருட்களை குறித்த காலத்தில் முகவர்களுக்கு டெலிவரி செய்யுங்கள் இளிச்சவாயன் முகவர்கள் இருக்கும் வரை பனை பொருட்களை என்ன பிளாஸ்டிக் பொருட்கள் கூட விற்பனைக்கு வரலாம்


Mohan vedhachalam
மே 21, 2024 10:30

இது ஒன்று தான் குறை முதலில் தயாரிப்பில் இருக்கும் பொருட்களை குறித்த காலத்தில் முகவர்களுக்கு டெலிவரி செய்யுங்கள்


ஜெயன்
மே 20, 2024 17:14

கள் கூட விக்கலாம். ரெண்டும்.ஒரே கலர். கலப்படம் செய்யலாம். ஆவின் டிலைட் கள். அமுல், கோவிந்தா...


ஆரூர் ரங்
மே 20, 2024 13:34

மேய்ச்சல் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருவதால் மாடு வளர்ப்பு வேகமாக குறைகிறது. ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்திய திமுக தங்களது தொண்டர்கள் வீடுகளில் நாட்டு மாடு( மட்டுமே)வளர்ப்பதை கட்டாயமாக்க ஆக்கட்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் இளைஞகர்களுக்கு மட்டுமே இளைஞரணியில் பதவி என்ற விதி கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டுப் போராட்டமே போலி.


Vivekanandan Mahalingam
மே 20, 2024 12:05

பால் விக்க வக்கு இல்ல - எந்த கிராமத்திலும் ஆவின் இல்ல - விஜய், ஆரோக்கிய கெவின் நிறுவனம் தான் விக்கறாங்க - ஆவின் தூங்கி கொண்டுள்ளது - அல்லது யாரோ பணம் பெற்றுக்கொண்டு மற்ற பால் நிறுவனங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்


Devan
மே 20, 2024 10:22

பால் நிர்வாகத்தில் உள்ள தவறுகள் இதிலும் இல்லாமல் இருந்தால் தான் ஆவின் நிலைக்கலாம் போட்டிக்கு அமுல் நிறுவனம் வந்ததால் மடைமாற்றி உபயோகம் இல்லை


Sampath Kumar
மே 20, 2024 09:05

நல்லது உருப்படியான காரியம்


Sankar
மே 20, 2024 08:55

we encourage diversification. at the same time please expand current milk products business.


V S Narayanan
மே 20, 2024 08:43

At the foremost let AAVIN make sincere endeavours to make freely available all the existing products especially BUTTER and thereafter venture new products and loot public money


V S Narayanan
மே 20, 2024 08:29

Let Aavin ensure the non-stop supply of Aavin butter to the public Thereafter let them try new ventures and loot money


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை