உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.தொகுதி மறுசீரமைப்பில், தமிழகம் 8 லோக்சபா தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bkq9zv64&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.,26) அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இது குறித்து நிருபர்களுக்கு சீமான் அளித்த பேட்டி:பல போராட்டங்களை தனித்து தான் செய்து இருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுது தான் பேசுகிறார்கள். இந்த கருத்தை 2003ம் ஆண்டிலேயே அறிக்கை விட்டு, இந்த கருத்திற்கு எதிராக பேசி இருக்கிறேன். கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம். அதனால் இதையே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கொங்கு தமிழன் பிரஷாந்த்
பிப் 27, 2025 08:30

முடிந்து போன கட்சிக்கு எதற்கு அழைப்பு.


தாமரை மலர்கிறது
பிப் 26, 2025 20:17

உங்ககூட இருந்த தம்பிகள் எல்லோரும் மூளை வளர்ச்சி பெற்று வேறுகட்சிக்கு ஓடிவிட்டார்கள் . காளியம்மாள் என்பவரும் புரிஞ்சி போய் ஓடிவிட்டார். அவருக்கே புத்தி தெளிந்துவிட்டதால், மற்றவர்களும் விரைவில் ஓடிவிடும் தருணத்தில் தான் உள்ளார்கள். புதிய மனவளர்ச்சி குன்றியவர்களை தான் தேடணும். பாவம் சைமன்.


Palanisamy T
பிப் 26, 2025 17:13

நல்ல நடிகனாக முன்பு இவரைப் திரைப் படத்தில் பார்த்தோம் ஆனால் இப்போது பொறுப்பற்ற அரசியல்வாதியாக காணவேண்டியுள்ளது. இவர் தன்னை மாற்றிக் கொள்வது நன்று.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 16:16

சீமானுக்கு 58 வயசாச்சு. அரணை யூரில் பிறந்த ஆமை. AK 74 துப்பாக்கி, வெடிகுண்டு, ஆமைக்கறி எல்லாம் வெச்சுண்டு வாழறதா பொய் சொல்லிண்டு திரிகிற பைத்தியம்.


தமிழன்
பிப் 26, 2025 15:43

மொதல்ல உன்ன யாரு வெத்தல பாக்கு வெச்சு அழைச்சா??


SUBRAMANIAN P
பிப் 26, 2025 14:50

சீமான் அவர்கள் அனைத்துலக அதிபர்கள் மாநாட்டுலதான் கலந்துக்குவார்..


Haja Kuthubdeen
பிப் 26, 2025 14:46

கடைசிவர நான் மட்டும் தனித்தே நிற்பேன்னு திரிய வேண்டியதுதான்.கட்சி சீக்கிரமா காணாம போயிடும்.


Barakat Ali
பிப் 26, 2025 14:17

அந்த கேலிக்கூத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது ....


ராமகிருஷ்ணன்
பிப் 26, 2025 14:07

அதாவது நாம் டுமிழன் கட்சியை நீயே ஒரு கட்சியாக அங்கீகரிக்கவில்லை. பைத்தியக்கார கூட்டம் ஒன்று என்று நடத்துகிறாய்.


Oviya Vijay
பிப் 26, 2025 13:55

கட்சியே காணாமப் போச்சு... ஏலேய்... இவருக்கெல்லாம் யாருய்யா அழைப்பு அனுப்புனது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை