| ADDED : மே 13, 2024 07:31 AM
அவிநாசி : திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கணியாம்பூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய சூட்கேசுடன் சுற்றிக் கொண்டிருந்த பீஹார் மாநிலம், கட்டிஹார் பகுதியைச் சேர்ந்த கானியடுகானியா, 23, என்பவரை பிடித்து விசாரித்தனர்.அவர் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கானியடுகானியா திருப்பூரில் இருந்து ஒடிசா சென்று ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த தவம், 44, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் குமார், 24 ஆகியோருக்கு விற்பனை செய்ததும், இவர்கள் தொழிலாளர்களுக்கு விற்றதும் தெரிய வந்தது.மூவரையும் போலீசார் கைது செய்தனர். தவம் மீது உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.