உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

மதுரை : எச்சில் இலையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் நடத்த அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

கரூர், நவீன்குமார் 2024ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மண்மங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபாவில், அவரது ஜீவ சமாதி தினத்தை முன்னிட்டு 2024 மே 18ல் அன்னதானத்தின் போது, பக்தர்கள் உணவு உட்கொண்ட பின் எச்சில் இலைகளில் நேர்த்திக்கடனாக உருளும் அங்கப்பிரதட்சணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதானம், அங்கப்பிரதட்சணம் நடத்த அனுமதிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த, 2024 மே 17ல் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு:

தமிழகத்தின் முக்கிய துறவிகளில் ஒருவர் சதாசிவ பிரம்மேந்திரர். ஜீவ சமாதி நாளில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வாழை இலைகளில் உருண்டு கொடுத்தல். 120 ஆண்டுகள் பழமையான சடங்கு, 2015ல் நிறுத்தப்பட்டது. அனுமதி கோரி, அதிகாரிகளுக்கு மனுதாரர் மனு அனுப்பினார்; பதில் இல்லை.நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி, ஆண்டு முழுதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர் ஒரு சித்த புருஷர். ஜீவ சமாதி தினத்தன்று, பக்தர்கள் உணவு உட்கொண்ட பின், வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது ஆன்மிக பலனை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாபாரத காலத்திலும் கூட, சாப்பிட்ட இலையில் உருண்டு கொடுப்பது ஆன்மிக பலனாக கருதப்பட்டது. இவ்வழக்கில் அதிகாரிகள் அனுமதி வழங்குவது குறித்த கேள்வி எழவே இல்லை. விருந்தினர்கள் உணவு உட்கொண்டபின் வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் பயன்படுத்த முடியும். இதில், அதிகாரிகள் தலையிட முடியாது. இவ்வாறு அவர் உத்தரவிட்டார். இதன்படி 2024 மே 18ல் நிகழ்ச்சி நடந்தது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, கரூர் கலெக்டர், திருவண்ணாமலை அரங்காநாதன் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.கலெக்டர், அரங்கநாதன் தரப்பு: நெரூர் கோவிலில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்வதை, 2015ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை செய்துள்ளது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. அந்த உத்தரவே இறுதியானது. நெரூர் கோவிலில், 2015 முதல் அவ்வழக்கம் நிறுத்தப்பட்டது.கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலில் இதுபோல், 500 ஆண்டுகளாக நடந்த பழமையான சடங்கு மேற்கொள்ள, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.எச்சில் இலையில் உருள அனுமதித்தால் பக்தர்களின் உடல்நலம் பாதிக்கும். சுகாதார பாதிப்பு ஏற்படும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பு: அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் மத உரிமை அடிப்படை உரிமை என்பதால், அதை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியாது. உணவு சாப்பிட்ட பின் எச்சில் வாழை இலைகளில் உருண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது எந்த வகையிலும் பொது ஒழுங்கு அல்லது நெறிமுறைகளை பாதிக்காது. உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.சதாசிவ பிரம்மேந்திரர் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அவரை பின்பற்றும் பக்தர்கள் தங்கள் குரு நல்வாழ்வை அளிப்பார் என நம்புகின்றனர். அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, இத்திருவிழாவை நடத்த விரும்புகின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: இது ஒரு மதத்தின் பழக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நடைமுறையாகவோ இருக்கலாம். இதனால் பொது ஒழுங்கு அல்லது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்நடைமுறை பொது ஒழுங்கு அல்லது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானதா என்பதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது. அதை தற்போது இந்நீதிமன்றத்தால் முடிவு செய்ய இயலாது. இதுபோன்ற விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கர்நாடகா கோவிலில் எச்சில் வாழை இலையில் உருண்டு கொடுக்கும் வழக்கத்திற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அது இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை நெரூரில் எச்சில் இலையில் உருண்டு கொடுக்கும் அங்கப்பிரதட்சணம் நடத்த அரசு அனுமதியளிக்கக்கூடாது.நெரூர் கோவில் விவகாரத்தில், 2015ல் இந்நீதிமன்ற உயர்ந்தபட்ச இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு இறுதியானது. அதை செல்லாது என தனி நீதிபதி மாற்றியமைக்க முடியாது. தனி நீதிபதியின் முடிவை இந்நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது; நியாயமற்றது. அது ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

V.Mohan
மார் 14, 2025 20:27

பக்தர் மனம் விரும்பி, வேண்டுதலுக்காக சில இடங்களில் நடக்கும் ஆன்மீக சம்பிரதாயங்களில் தேவையற்று மூக்கை நுழைப்பது தமிழக அரசுக்கு தேவையற்றது.


अप्पावी
மார் 14, 2025 15:29

இது மாதிரி கேசுக்கெல்லாம் நியாத சம்ஹிதையில் வழிகாட்டுதல் எல்லாம் கிடையாது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். அவிங்கவங்க தனிப்பட்ட எண்ணங்களுக்கு ஏத்த மாதிரிதான் தீர்ப்பு கிடைக்கும். சட்டம்னு ஒண்ணும் கிடையாது. நீதிமன்றம் போறதே வேஸ்ட்.


Velan Iyengaar
மார் 14, 2025 16:14

அப்போ அது பொருந்தும் தானே ...


Sampath Kumar
மார் 14, 2025 14:01

நீங்க எல்லாம் என்னத்த ஜென்மத்திலும் இருந்த போவது இதயத்து உங்க அமி சொல்லுச்சி ஏசிகி ல்லை மீது பிரண்டு அங்க பிரதச்சனம் செய் உன்னக்கு கோடி கொடுக்கிறான் என்று ஏன் இந்த காலத்தில் இப்படொயட்டா பண்னவீங்க இது கோர்ட் கேஸ் வேற போங்க பொய் வேறு ஏழை பாருங்க


sribalajitraders
மார் 14, 2025 11:15

அடுத்தவர் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருள்வது என்பது மனித தன்மையற்ற செயல் நீதிமன்ற தீர்ப்பு சரியானதுதான்


sridhar
மார் 14, 2025 10:56

அந்த தினத்தில் சதாசிவ ப்ரம்மேந்திரரே ஒரு பக்தர் ரூபத்தில் வந்து உணவருந்துவதாக நம்பிக்கை . அதனால் தான் அந்த இலைகளில் உருளுகிறார்கள் . இது பக்தர்கள் விருப்பம் .


ஆரூர் ரங்
மார் 14, 2025 10:44

எச்சில் இலைகளில் உருள்வது உடல்நலத்துக்கு கேடு என்றால் ஒரே தட்டில் ஒரே நேரத்தில் பலர் பிரியாணி உண்ணுதலையும் தடை செய்வார்களா? அது சுகாதாரக் கேடில்லையா?


Haja Kuthubdeen
மார் 14, 2025 11:24

நீங்க யாரை நினைத்து கருத்து போட்டுள்ளீர்கள் என்பது புரியுது...ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் பகிர்ந்து உண்பது அரபுகள் வழக்கம். நம்நாட்டிலும் கணவர் உண்ட தட்டில் மீதமுள்ளதை மனைவி சாப்பிடுவது வழக்கத்திலும் உள்ளது..உணவை சாப்பிடுவது சுகாதாரக்கேடா யாரும் குறை சொல்வது இல்லை.மீதமுள்ள எச்சத்தில் உருள்வது பற்றிதான் நீதிமன்றத்தில் வழக்கு..மாற்றுமத விசயத்தில் நுழைவது என் பழக்கமே இல்லை.. நீங்க குறிப்பிட்டதால் மட்டுமே பதில் கூறியுள்ளேன்.


ஆரூர் ரங்
மார் 14, 2025 10:40

இறைவன் தந்த உடலை வருத்திக் கொண்டு அவரை எண்ணி பிரார்த்தனை செய்வதை படைத்த எல்லாம் வல்லவன் ஏற்பாரா? அடுத்து பூக்குழி இறங்கி தீமிதி, உடலெங்கும் அலகு குத்தி காவடி எடுப்பதை தடை செய்வார்களா?


baala
மார் 14, 2025 12:23

வழக்கு போட்டால் தானே அது எப்படி என்று தெரியும்.


M S RAGHUNATHAN
மார் 14, 2025 10:38

தனி மனித உரிமை தலையிட அரசுக்கோ அல்லது நீதி மன்றத்திற்கோ உரிமை இல்லை? அடுத்த மனிதர்க்கு ஒருவித துன்பம் ஏற்படாமல் செய்யும் ஒரு காரியத்திற்கு ஏன் தடை? இதை சொல்லும் நீதிபதி நாளை ஹிந்து மத சடங்குகளை தடை செய்தாலும் ஆச்சரியம் இல்லை. சடங்குகளில் நெருப்பை வளர்ப்பதால் தீ விபத்து ஏற்படலாம், புகையின் காரணமாக மூச்சு திணறல் ஏற்படலாம் என்று காரணம் காட்டுவார்கள் இந்த அறிவார்ந்த நீதிபதிகள். அது போன்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவது "abuse of Children" என்று சொல்லி தடை விதிக்கலாம். காது குத்துதல் ஒரு காட்டுமிராண்டி வழக்கம் என்று சொல்லி தடை விதிக்கலாம். இந்த நீதிபதிகள் இருவரையும் உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றினால் மிக நன்றாக இருக்கும்.


Mecca Shivan
மார் 14, 2025 10:26

உண்மையில் நல்ல தீர்ப்பு மொஹரம் அனுஷ்ட்டிக்கும் போது ஷியா முஸ்லிம்கள் பிளேடு செயின் மற்றும் கத்திகளால் தங்களை தானே தாக்கிக் கொள்வதும் இஸ்லாமியார்கள் ஒரே எச்சில் தட்டில் 10.20 பேர் உண்பதும் தடைக்கு உகந்ததே


Haja Kuthubdeen
மார் 14, 2025 11:33

தன் உடலை வருத்திக்கொண்டு ரத்தகாயம் ஏற்படுத்தும் வழிபாட்டை இஸ்லாம் ஏற்றுகொள்ளவில்லை. குர்ஆனிலோ.. ஹதீஸ்களிலோ இல்லை...இடையில் வந்த ஷியா பிரிவினர்கள் தானாக இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டது...கணவர் உண்ட தட்டில் மனைவி சாப்பிடுவதும்..நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் உண்பதும் சுகாதாரக் கேடு இல்லை.அது இப்பவும் பரவலா இருப்பதே...சந்தடி சாக்கில் முஸ்லிம்கள் பற்றி வழக்கம் போல குதர்க்க கருத்து...


Indhiyan
மார் 14, 2025 09:53

எங்கள் ஊரில் ராம நவமி நிறைவு நாளன்று எல்லாரும் சாப்பிட்ட இலைகளை சாமி முன்பு போட்டு, அநேகம் பேர் அதில் உருளுவார்கள். சீதா, ராம, லக்ஷ்மணர்கள் யாருடைய உருவிலாவது வந்து சாப்பிட்டு இருப்பார்கள். அவர்கள் எச்சில் நம் மீது படவேண்டும் எனும் நம்பிக்கையில் செய்யப்படுவது. நெரூர் ல் நடப்பதும் அப்படிப்பட்ட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையில் தலையிட கோர்ட்டுக்கோ அரசுக்கோ அதிகாரமில்லை. வள்ளுவர் சொன்ன மாதிரி, தன் குழந்தையின் சிறு கை அழாவிய கூழ் பெற்றோருக்கு அமிழ்தினும் இனியது. அங்கே சுத்தம்/சுகாதார பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோலத்தான் இதுவும். டாஸ்மாக்கில் குடிப்பது சுகாதாரம், குடித்து செத்துமடிவது சுகாதாரம். அதையெல்லாம் கேட்க நாதியில்லை, இறை நம்பிக்கையின்/பக்தியின் ஒரு உச்சத்தில் செய்வதை தடை செய்கிறார்கள், வெட்கம் கெட்டவர்கள்.


முக்கிய வீடியோ