பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை: 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு:பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றங்களை கையாள்வதில் பெண் போலீசாரின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், சிறப்பு மேம்பாட்டு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதன்படி, பெண் எஸ்.ஐ., முதல் கூடுதல் எஸ்.பி., வரையிலான, 2,100 பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐந்து நாள் பயிற்சி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடத்தப்படும். இரண்டாம் நிலை பெண் காவலர்கள் முதல் சிறப்பு எஸ்.ஐ., வரையுள்ள, 23,805 பெண் போலீசாருக்கு, சென்னை, ஆவடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 பணியிட பயிற்சி மையங்களில், மூன்று நாள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிக்காக, 91.57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.