உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடலூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் வினோதமான சரம் குத்துதல் நிகழ்ச்சி

கூடலூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் வினோதமான சரம் குத்துதல் நிகழ்ச்சி

குளித்தலை அருகே கூடலூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் வினோதமான சரம் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றதுகரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் திருவிழாவில் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டு கிராமத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல் அக்னி சட்டி ,அளவு குத்துதல் ,முடி காணிக்கை செய்தல் மாவிளக்கு எடுத்தல். கெடா காவல் கொடுத்தல், குழந்தைகளை தொட்டில் சுமந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்திருவிழாவின் இறுதி நாளான மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.பக்தர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், பக்தர்கள் படுகளம் விழுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடர்ந்து வினோதமான முறையில் ஆட்டு தலையை (. சரம் குத்துதல் ) பக்தர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சரம் குத்து நிகழ்ச்சியில் கோவிலை சுற்றி மூன்று முறை வந்தனர்.இறுதியாக மூன்றாவது முறையாக ஆட்டு தலையை சரியாக குத்திய வாலிபருக்கு விழா குழுவின் சார்பில் மாலை போட்டு வரவேற்றனர்.தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.இத்திருவிழாவில் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இத் திருவிழாவில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், கழுகூர், கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துச்சாமி, அடைக்கலம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விழா கமிட்டியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி