உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை தடுக்க வேண்டும்; பிரதமருக்கு இலங்கை மீனவர்கள் மனு

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை தடுக்க வேண்டும்; பிரதமருக்கு இலங்கை மீனவர்கள் மனு

ராமநாதபுரம்: 'இலங்கை பகுதியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்,' என இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்காவுக்கும், பிரதமர் மோடிக்கும் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் மீன் பிடித்துறை இலங்கை கடலையே நம்பியுள்ளது. புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய மீன்பிடி முறைகளில் முதலீடு செய்யக்கூடியதாக உள்ளது.இந்நிலையில் அத்துமீறி முல்லைத்தீவு, யாழ்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீன் பிடிபடகுகளால் எங்கள் மீனவர்களின் வலைகள், தொழில் உபகரணங்கள் பாதிக்கப்படுகின்றன.இந்திய மீனவர்களின் இழுவை மடிகள் எங்கள் கடலின் வளங்கள் அனைத்தையும் சேதமாக்குகிறது. இதன் மூலம் சிறிய மீன் இனங்கள் முதல் கடல் புற்கள், கடல் பாறைகள் போன்ற மீன் உற்பத்தியாகும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.நுாற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி நுழைந்து எமது கரையை ஆக்கிரமித்து கடல் தொழிலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை கண்டிக்கிறோம். இந்திய மீனவர்களை கைது செய்யவும், படகுகளையும் பறிமுதல் செய்யவும் நாங்கள் கோரவில்லை.இந்திய அரசு, தமிழக அரசு இவர்களை உரிய முறையில் கண்காணித்தால் அத்துமீறல் அதிகளவில் இருக்காது என்பது எங்கள் நிலைப்பாடு. தொழில் நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை கொண்டுள்ள இந்திய நாடு இதனை கண்காணித்தல் என்பது கடினமான காரியமில்லை.அமைதி வழி போராட்டமானது இந்திய அரசுக்கு எதிராகவோ, இந்திய மக்களுக்கு எதிராகவோ இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இலங்கைக்குள் எல்லை தாண்டுபவர்கள் மீதான சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.மனுவை இலங்கையில் உள்ள இந்திய துாதரகம்மூலம் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sridhar
மார் 02, 2025 13:30

இலங்கை கப்பற்படை ரோந்து போவதைப்போன்று ஏன் இந்திய நேவியும் அங்கு சென்று மீனவர்களை வழிமுறை படுத்தக்கூடாது? இலங்கையினரால் கைது செய்யப்படும்முன்னரே இந்திய கப்பற்படை அவர்களை திருப்பி இந்திய எல்லைக்குள் அனுப்பலாமே?


Barakat Ali
மார் 02, 2025 10:13

தமிழக மீனவர்கள் பேராசையால் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கைக் கடல் எல்லைக்கு சென்று விடுகிறார்கள் ..... சொன்னது சாட்சாத் மரம்தான் .....


veeramani
மார் 02, 2025 09:45

அன்றைய பிரிக்கப்படாத ராம்நாத் மாவட்ட தமிழன் கருத்து ....... சென்னையிலிருந்து கொழும்பிற்கு ஒரே ஓரூ ரயில் டிக்கெட் பெற்று பயணம் செய்ய அறுபதுகளில் வசதி இருந்தது .பின்னர் ராமேஸ்வரம், பாம்பன், தனுசுகோடி பகுதியில் வசித்துவந்த ராம்நாத் மாவட்ட மக்கள் மீன் பிடி த்து வந்தனர். எழுபதுகளில் இலங்கையில் தமிழீழ சண்டை வந்தவுடன் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மீன் தொழிலை விட்டுவிட்டனர். இங்குதான் பிரச்சினை துவங்கியது . மீன்பிடி படகை தூத்துக்குடி, கன்னியாகுமரி வாழ் மீனவர்கள் குழிக்கு மீன் பிடிக்க வரத்துவங்கினர் . இவர்கள் அண்டையிலுள்ள புதுக்கோட்டை மீனவர்களிடம் சண்டை போடுகிறார்கள். மேலும் இவர்களுக்கு சுருக்கு மாடி வலை போட்டு தரையில் உள்ள மீன் குஞ்சுகளை கூட விடாமல் அரித்து மீன்களை பிடிக்கிறார்கள் . இதனால் சில மாதங்களில் மீன் கிடைப்பதில்லை. இதனால் இலங்கை கடல் சென்று அங்கு வசிக்கும் தமிழ் பேசும் ஈனவர்களின் மீன்களை திருட்டு தனமாக பிடிக்கிறார்கள். இலங்கை யில் வசிப்பவர்களும் தமிழ் பேசும் மீனவர்கள்தான். எங்களது மிக பெரிய வருத்தம் ராமேஸ்வரத்தில் பிடிக்கு மீன்களை ராம்நாடு, மதுரை, சிவகங்கையில் விற்பதேயில்லை. அனைத்தையும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் . எங்களது பகுதி யில் பிடிக்கும் மீன்களை சாப்பிடுவதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு . முதலில் தங்கச்சிமடம், உள்ள வேறு மாவட்ட மீனவர்களை வெளியேற்றுங்கள். தமிழக இலங்கை மீன் பிடி தொழில் எந்த பிரச்சினையும் ஏற்படாது சுமார் இ ராண்டியிரம் வருட தொப்புள்கொடி உறவு உள்ள தமிழ் பேசும் மக்களை பட்டினி போடா இந்திய தமிழக தென் மாவட்ட மக்கள் தயாரா கஇல்லை


Kasimani Baskaran
மார் 02, 2025 07:38

படகு வாடகைக்கு விட்டு தொழில் செய்பவர்களுக்கு ஜிபிஎஸ் வாங்கி இந்திய எல்லைக்குள் இருந்து மீன் பிடிக்க தொழில் நுணுக்கம் கிடையாது என்று சொல்வது நல்ல காமடி. ஐஎஸ்ஆர்ஓ இந்திய ஜிபிஎஸ் க்கு பல செயற்கைக்கோளையே வைத்திருக்கிறது. இரட்டை மடிப்பு வலைகளை உபயோகிக்கக்கூடாது என்றால் அதையும் செய்வார்கள்...


Balaa
மார் 02, 2025 07:24

இதுலையும் உலகின் நம்பர் ஒன்...


லிங்கம, கோவை
மார் 02, 2025 05:28

இலங்கை மீனவர்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக... ஈழத் தமிழ் மீனவர்கள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும். ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி போய் சென்று கெடுக்கக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழ் மீனவர்களின் கோரிக்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை