உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்: பழனிசாமி

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் தத்து ஆவணங்களுக்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளது. டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p131ma9j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 26 சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும். மின் கட்டணம், பால் உள்ளிட்ட விலை உயர்வு மூலம் மக்கள் தலையில் தமிழக அரசு சுமையை ஏற்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
மே 12, 2024 19:34

மிகவும் ஈன ஸ்வரத்தில் கேட்கிறது குற்ற முள்ள நெஞ்சு பம்முவது ஞ்யாயம் தானெ


முருகன்
மே 12, 2024 13:36

கருப்பு பணத்தில் சிறிது அரசாங்கத்திற்கு கொடுப்பதில் என்ன பிரச்சினை


vijai
மே 12, 2024 14:48

உன்கிட்ட இருந்தா நீ குடு


M Ramachandran
மே 12, 2024 13:22

ஜாக்கிரதை கண்ட மாதிரி பேசி முக்கிய மான மூண்டெழுத்து கட்சியின் தலைவர் குடும்ப சம்பந்தமாக பேசி சவுக்கு சங்கர் நிலமை போல ஆகி விட போகிறது போலீசு பிடி பிடிக்கும் ஐயா போலிசு பிடி பிடிக்கும் அப்புறம் யோசித்து இந்த நிலைமைக்கு ஆளாகி புராணமென என்று கவலையய் கொள்ளா வேண்டும் இப்போ பிஜேபி உங்களாலும் ஜென்ம விரோதி அவர்களிடமிருந்து உதவி எதிர் பார்க்க முடியாது


கோந்து
மே 12, 2024 12:52

எல்லோருக்கும் நிறைய சம்பளம் வேணும். விபத்தில் செத்தா 50 லட்சம்.குடுக்கணும். போலுஸ் இறந்தா ஒரு கோடி குடுக்கணும். ஆனா, காலணா கட்டணம் ஏத்தக் கூடாது. எல்லாம் ஃப்ரீயா குடுக்கணும். இதுதான் அண்ணா திராவிட மாடல்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை