உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஐ.பி.,க்களுக்கு இரையான மாணவியர்: தொழிலுக்கு தள்ளிய பெண் வாக்குமூலம்

வி.ஐ.பி.,க்களுக்கு இரையான மாணவியர்: தொழிலுக்கு தள்ளிய பெண் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'பள்ளி சிறுமியர் மற்றும் பெண்களை, வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அனுப்பி விருந்தாக்கினேன்' என, பாலியல் தொழில் பெண் புரோக்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37, உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம், நதியா அளித்துள்ள வாக்குமூலம்: நான், 10ம் வகுப்பு படித்துள்ளேன். வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி, சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பது தான், என் பிரதான தொழில். 'ஸ்மார்ட் போன்' செயலி வாயிலாக, விபசார தொழில் குறித்து தெரிந்து கொண்டேன்.பணம் அதிகம் கிடைக்கும் என்பதால், அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அதில், டாக்டர் தாமஸ் சாலையில் வசித்து வரும் என் உறவினர்கள் சுமதி, 43; ஜெயஸ்ரீ, 43, ஆகியோரையும் இணைத்து கொண்டேன். எங்களிடம் புரோக்கராக, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 31, என்பவர் செயல்பட்டார்.பிளஸ் 2 படித்து வந்த என் மகள், தன்னுடன் படிக்கும் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவார். அவர்களின் குடும்ப பின்னணி குறித்து விசாரிப்பேன். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவியரை குறிவைத்து, அவர்களுக்கு தேவையான உடைகள், வளையல் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பேன்.தோழியின் தாய் என்பதால் என்னை நம்பினர். அவர்களிடம், குடும்ப வறுமையை போக்கி விடலாம் என, நைசாக பேச்சு கொடுத்து, வீட்டில் தனியாக இருக்கும் வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்தாக்கினேன். அவர்களிடம், 15 - 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.ஆனால், மாணவியருக்கு, 500 - 1,000 ரூபாய் கொடுப்பேன். அடுத்த முறை அழைக்கும் போது சம்மதம் தெரிவிக்காத மாணவியரிடம், 'உன் அந்தரங்க வீடியோ மற்றும் படங்கள் என்னிடம் உள்ளன. அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன்' என, மிரட்டி பணிய வைப்பேன்.அவர்களும் வேறு வழியின்றி, 'பதிப்பகத்தில் புத்தகம் அடுக்கி வைக்கும் வேலைக்கு செல்கிறேன். அதிகாலையில் தான் வீட்டிற்கு வருவேன்' என, சொல்லி விட்டு வருவர். என் கட்டுப்பாட்டில் இருந்த மாணவி ஒருவரின் பெற்றோருக்கு, இதுவரை மகள் என்ன செய்கிறார் என்பது கூட தெரியாது. என்னிடம், 70 வயது நபர்கள் கூட வாடிக்கையாளராக உள்ளனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

இராம தாசன்
மே 29, 2024 19:15

எல்லாவற்றுக்கும் பொங்கும் போராளிகள் - கனி அக்கா / ஜோதிகா / வீனா போன சிவகுமார் குடும்பம் / காமால் ஹசன் - எல்லோரும் எங்கே போனார்கள்


Krishnamurthy Venkatesan
மே 28, 2024 17:44

தன்னுடன் படிக்கும் நண்பிகளுக்கு துரோகம் இழைத்த அந்த பெண்ணையும் சும்மா விட கூடாது. இல்லாவிட்டால் அவளின் அம்மாவிற்கு பின் இந்த தொழிலை வேறு லெவெலுக்கு கொண்டு சென்று விடுவாள். நமது கண்டனை சட்டங்கள் மாற்றப்பட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சாமானிய மக்களுக்கும் ஒரே மாதிரியான விசாரணை, தீர்ப்பு மற்றும் தண்டனை வேண்டும்.


Ram pollachi
மே 28, 2024 15:17

இவரை போன்றோர்களை சுட்டு தள்ள நினைத்தால் துப்பாக்கிகள் பத்தாது...


திண்டுக்கல் சரவணன்
மே 28, 2024 14:36

விஐபிக்களின் பெயர்களை வெளியிட வேண்டியதுதானே. உண்மையில் குற்றம் புரிந்தவர்கள் அந்த விஐபிக்கள் தான்


SIVAN
மே 28, 2024 13:47

500, 1000 ரூபாய் வாங்கிக்கொண்டு, மற்றும் இலவசங்களை நம்பி வோட்டை போட்டால் இந்த கதிதான். பெற்றோர்களின் கவனமின்மை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அப்பா அம்மா இரண்டு பெரும் தினமும் குழந்தைகளிடம் பேச வேண்டும், என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம்.


Sree
மே 28, 2024 13:09

அரசு பதவி அரசு அதிகாரத்தில் இருக்கோம் என்ற திமிர் அம்பேதகர் கூறு ஆசிர்வாததின் கீழ் சட்டம் இயற்றியது இதற்குத்தான் எந்த வழக்கா இருந்தாலும் மூன்று மாதத்தில் தண்டனை என சட்டம் வராமல் இருப்பது ஒரு காரணம் இந்தியாவில் உள்ள எந்த பொது ஜனம் வியாபாரி தொழில் துறைக்கு சிறிய மட்டும் சட்டம் தன் கடமை செய்யும் அரசியல் வாதி மந்த்ரிகளின் வாழை பழத்தை வாயில் வைத்து வார்கள் அநீதி மக்கள்


sivakumar Thappali Krishnamoorthy
மே 28, 2024 12:51

இவர்களுக்கு விஇ பி வக்கீல்கள் வருவார்கள் ..நல்ல சட்டம் போங்க ..


M Ramachandran
மே 28, 2024 12:42

போச்சோ உபா இந்த ஆண்கள் வி ஐ பீ ளுக்கு பொருந்தாதா


Jayaraman Ramaswamy
மே 28, 2024 12:13

இந்த மாதிரி ஆட்களை முதலில் நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ள வேண்டும். செய்த குற்றங்கள் பட்டியல் இடப்பட்டு பொதுமக்களுக்கு தெரிய வைத்து பின்னர் கொல்ல படவேண்டும். இதுமாதிரி எல்லா வூர்களிலும் செய்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. பாதிக்கப்பட்ட பெண்களைப்பற்றிய விபரம் வெளியிடக்கூடாது.


Lion Drsekar
மே 28, 2024 11:54

இந்த ஒரு வளர்ச்சிதான் சீரும் சிறப்புமாகி நல்ல முறையில் வளர்க்கிறது . இதில் எல்லோருக்கும் பங்குண்டு , இதை உலகும் அறியும் , இதுவும் கடந்து போகும், யாரை குறை கூறுவது ? வந்தே மாதரம்


மேலும் செய்திகள்