உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.செங்கல்பட்டில் ரூ.515 கோடியில் அமைந்துள்ள கோத்ரேஜ் ஆலையைத் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நுகர்பொருள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகம். கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தெற்காசியாவில் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் தமிழகம்; இந்தியாவின் வளர்ச்சியில் நம் மாநிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில், நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம். அதை தான் நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ravi
மார் 10, 2025 18:16

ஆமாம் இவரும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை ஏமாற்றித்தான் முதல்வர் ஆனார்


Kumar
மார் 10, 2025 16:38

ஒரு பொய்யானதை செயலை திரும்ப திரும்ப செய்தால் உண்மையாகும்


vijai hindu
மார் 10, 2025 16:12

ஒரு வீட்டை தொடர்ச்சியா நோட்டம் விட்டா எப்படி கொள்ளை அடிக்கிறதுக்கு என தெரிந்துவிடும் இதுவும் ஒரு வெற்றி தான்


sankar
மார் 10, 2025 16:10

அதனால்தான் ஊழலை தொடர்ச்சியாக செய்துவருகிறோம்


raja
மார் 10, 2025 16:04

அதாவது சென்ற தேர்தலில் எப்படி நீங்க தொடர்ச்சியாக பொய்யை சொல்லி தமிழர்களை உண்மை என நம்பவைத்து வெற்றி பெற்று ஆட்சி பிடத்தது போலன்னு சொல்ல வர்ரீங்கன்னு டைரக்ட்டா சொல்ல வேண்டியது தானே....இப்போ கோடா திராவிட மாடல் திராவிடன் சொல்லி தமிழனுக்கே தான் திராவிடன் இல்லை என்பது போய் ஒருவேளை தமிழன் திராவிடன் தானோ என்ற சந்தேகத்தை கொண்டு வந்து வெற்றி பெற்றது போலன்னு சொல்லுங்க....


surya krishna
மார் 10, 2025 16:00

poiyai thirumbha sonnaal athu unmai aagividum ena solkiraar pola


SRITHAR MADHAVAN
மார் 10, 2025 15:28

அதற்காகத்தான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை இந்தி திராவிட மாடல் அரசாங்கத்திற்கு எதிரானது என்று நம்ப வைத்து அவர்களை ஏமாற்றுகிறீர்கள்.


நிக்கோல்தாம்சன்
மார் 10, 2025 15:16

ஆனாலும் உங்களால் சரியாக படிக்கவே முடியவில்லையே , அப்போ அதற்க்கு பெயர்?


Sridhar
மார் 10, 2025 15:15

ஓஹோ, அப்படியா? அதுதான் கருணாநிதி பாலிசியா? பலே, பலே சும்மா சொல்லக்கூடாது, உண்மையாவே வெற்றிதான், இதுவரை ஒருபய இவனுகள பிடிக்கமுடியலையே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை