உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரஜ்வல் காதலிக்கு சம்மன்: மகனை பார்த்து தந்தை கண்ணீர்

பிரஜ்வல் காதலிக்கு சம்மன்: மகனை பார்த்து தந்தை கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹாசன்: விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் காதலிக்கு, சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.கர்நாடக மாநிலம், ஹாசன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஏழு நாட்கள் காவலில் எடுத்தனர்.கடந்த 6ம் தேதி அவரது காவல் முடிந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்தனர். நாளையுடன் அவரது போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது.இந்நிலையில், ஹாசன் ஆர்.சி., ரோட்டில் உள்ள வீடு, ஹொளேநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீடுகளுக்கு, பிரஜ்வலை நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.பிரஜ்வலின் அறையில் அங்குலம், அங்குலமாக சோதனையும் நடத்தப்பட்டது. ஹொளேநரசிபுரா வீட்டில் சோதனை நடந்த போது அங்கிருந்த ரேவண்ணா, மகன் பிரஜ்வலை பார்த்து கண்ணீர் விட்டார்; பிரஜ்வலும் அழுதார். விசாரணை முடிந்ததும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இதற்கிடையில் பிரஜ்வல், ஜெர்மனியில் இருந்த போது, அவருக்கு பெங்களூரில் இருந்து பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். பிரஜ்வலுக்கு, அவரது காதலி பணம் அனுப்பியதும், ஜெர்மனியில் தலைமறைவாக இருக்க உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
ஜூன் 09, 2024 12:54

இறைவா ஆசையை அழித்து விடு இல்லை எனில் என் மூச்சை நிறுத்தி விடு...


VENKATESAN V
ஜூன் 09, 2024 10:13

இதை ஒரு செய்தின்னு வெளியிட்டு மேலும் உங்க தரத்தை கெடுத்து கொள்ளாதீர். பாதிக்க பட்டவர்கள் கண்ணீர் வடித்தால் பரவயில்லை இங்கு பாதிப்பை ஏற்படுத்தியவரை பார்த்து கண்ணீர் வடிப்பது செய்தி. இவர்களை நீங்கள் எந்த கோணத்தில் நோக்குகிறீர்கள்?


Mani . V
ஜூன் 09, 2024 07:13

இந்த அழுகை மகன் மொள்ளமாரித்தனம் செய்யும் பொழுது வந்திருக்க வேண்டும். இப்பொழுது அழுது?


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 06:51

சிறப்பு புழு ஒன்றை தமிழகத்தில் ஆரம்பித்து கிழக்கு கடற்கரை சாலையை சல்லடை போட்டால் இது போல டஜன் கணக்கில் அனுபவிப்பாளர்கள் சிக்குவார்கள். தமிழகமே நாறிவிடும் அளவுக்கு அங்கு அக்கிரமம் நடப்பதாக அந்த பாடகி பேட்டியில் சொல்லியிருக்கிறார்...


மேலும் செய்திகள்