வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இந்தியாவில் மும்மொழி கொள்கை அவசியமில்லாதது ஒரு உதாரணம் நான் ஒரு கேரளா மாநிலத்தை சார்ந்தவனாக இருந்து மூன்றாவது மொழியாக கன்னட மொழி படித்து அந்தகன்னட மொழியை மும்பையில் பேசினால் அங்குள்ள மக்கள் யாருக்கு நான் பேசும் மொழி புரியும் மூன்றாவது மொழி உலகளவில் பேசும் மொழியாக இருந்தால் அது தேவைதான் நாம் கொண்டு வருவது இந்தியாவில் உள்ள மாநில மொழிகளை உலகளவில் பேசும் மொழியை அல்ல எனவே மும்மொழி கொள்கை திட்டம் அவசியமற்றது
இங்க தமிழ்நாட்ல இருக்கிற முஸ்லீம் பெருமக்கள் பெரும்பான்மையினருக்கு இந்தி உருது தொியும்..இங்க உள்ள தமிழர்கள் இந்தி கத்துக்கிட்ட அவங்க பொழப்பு கெடும்...உருதுக்கு பள்ளிக்கூடம் தொறக்கிற இந்தி வே ண்டாம்
காசு இருப்பவன் வீட்டு பிள்ளைகள் மட்டும் தான் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மொழியில் படிக்க வேண்டுமா..... அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் இலவசமாக கிடைக்கும் கல்வியை படிக்க கூடாதா.... இரண்டு மொழியில் மட்டும் தான் படிப்பது நல்லது என்றால்.... அப்படி கூறும் ஆட்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காமல்.... தனியார் பள்ளிகளில் சேர்த்து மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மொழியில் படிப்பது ஏன் ???
எதையும் இதமாய் சொல்வது தமிழர் மரபாயிருந்தது ஒரு காலம்: இதோ சிந்தனைக்கு சில - பெருங்காயம் இருந்த பாண்டம் பட்டு மங்குனா பொட்டியிலே “நடை” “உடையா” இருக்கார் உங்க பட்டுக்கு நாங்க பாய் போட முடியுமா? யானை மேல போறவன்கிட்டே சுண்ணாம்பு கேட்டானாம். தெருப் பிச்சைக் காரனுக்கும் இதமாய் பதில் - “மிஞ்சிப் போச்சு போய் வா” . அவரவர் மேதா விலாசத்துக்கேற்ப அதனுள்ளிருக்கும் விருத்தாந்த வேதாந்தங்களை விஸ்தாரம் செய்து கொள்ளலாம். இப்படியும் இங்கே சமஸ்க்ருதம் விரவிய சொல்லாடல் இருந்தது ஒரு 'இரண்டுங்கெட்டான் சங்க காலம்”. இன்று யாரும் யாரையும் இழிவு படுத்துவதே மேத்தா விலாசமாக கருதும் காலம் அரசியல் மேடைகள் இலக்கிய மேடைகளாய் இருந்தது போய் லாவணிக் கச்சேரிகளாகியுள்ளதே. விவாத மேடைகளில் என்ன சொல்கிறார்கள் என்றே தெரியாதபடி கத்தியே எதிராளி பேச்சு யாருக்கும் கேட்க்காத வண்ணம் செய்வதற்கென்றே நியமிக்கப் படுகிறார்கள்.
திமுக என்ன சொல்கிறதோ அதை தான் பழனிச்சாமி சொல்கிறார்.... அந்த அம்மா இருந்து இருந்தால்...... இவர்கள் அனைத்து கட்சி கூட்டம் என்று இவர்கள் நடத்திய நாடகத்துக்கு போய் இருப்பாரா..... ஸ்டாலின் அவர்கள் கோபித்துக்கொள்ள கூடாது என்று... கூட்டத்தில் அதிமுக கலந்து கொண்டு இருக்கிறது.
இங்கே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார், நாங்களே தீர்மானிப்போம் என்று சொன்னவர்கள், இப்போ மாணவர்களின் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க நீங்கள் யார். மாணவர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துங்கள். அப்புறம் முடிவு பண்ணலாம் எதப் படிப்பது என்று.
உங்களுக்கு மும்மொழிக் கொள்கையினால் நாளை தமிழகத்திற்கும் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் வரப் போகும் ஆபத்தை உணரமுடியவில்லையா? மாணவர் மத்தியில் வாக்கெடுப்பா தாராளமாக நடத்துங்கள். அதே சமயம் அம் மாணவர்கள் மத்தியில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்கெடுப்பும் நடத்துவதற்கு வாய்ப்பும் கொடுங்கள் . அனுமதியும் தாருங்கள். என்ன தீர்ப்பு கொடுக்கின்றார்களென்று பார்ப்போம்.
2 . அடுத்து இன்னொன்று. மாணவர்கள் மூன்றாவது மொழியென்று எதை தேர்ந்தெடுப்பார்கள். கேரளாமா , கன்னடமா, தெலுங்கு மொழியா அல்லது அசாம் மாநில மக்கள் பேசும் மொழியா? இதையெல்லாம் கணக்கில் போடாமலா மத்திய அரசு இந்த கல்விக் கொள்கையை கொண்டுவந்தான். சோழியன் குடுமி சும்மா ஆடாதப்பா 3. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் டில்லியில் அவரிடம் இந்தியாவில் அதிகமாக பேசும் மொழி என்பதால் இந்தமொழிதான் தேசியமொழியாக யிருக்கவேண்டுமாறு சொன்னபோது அண்ணா அவர்கள் இந்தியாவில் அதிகமான பறவையினம் காக்காய் என்பதால் அதையே தேசிய பறவையாக அறிவியுங்கள் என்றாராம். ஏன் மயில் தேசிய பறவையாக இருக்கவேண்டும்தங்கம் அழகிய மயில் போன்றதுதான் நம் மொழி. சுமார் 5000 வருசமா எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நம் இனத்தை தாய்ப் போன்று அணைத்து அழியாமல் நம்மை காத்து வந்த தாய்மொழியை நாம் காப்பாற்ற தவறிவிட்டால் நாம் மாந்தராக பிறந்தோமே அதானால் என்ன பயன் நாம் அதை அழிக்க முற்படுகின்றோம். கடைசியாக ஒன்றை மட்டும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ஒருக் காலத்தில் கேரளா கன்னடம் ஆந்திரா இன்று தெலுங்கானா என்ற மாநிலங்களில்லை . இன்று இருக்கின்றது. ஏன் என்பதை கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம் . அப்போது புரியும் உண்மை
இன்றும் இங்கே தெளிவாக சிந்திக்க முடிந்தவர்களும் ஏராளமாக உள்ளனர். பழனிசாமி ஒருவர் பாராட்டுக்கள்.பெரியார் கட்சி தன் சமூக சீர்திருத்த வேலையில் சுணக்கமாயிருந்தது சூப்பர் ஸ்டார் எதோ சொல்லி கிளறிவிட்டது இரண்டு பக்கமும் கிளர்ந்து எழச்செய்துள்ளது ஊருக்கு ஊர் தேர் திருவிழாக்கள் டிவி க்கு டிவி விவாத மேடைகளில் திக திமுக வினரின் சுளீர் பிரச்சாரம் களை கட்டுகிறது. வட மாநிலங்களையும் திரும்பி பார்க்க / யோசிக்க வைத்துள்ளதை காண்கிறோம். முத்து குமாரும் தெளிவடைவார் என நம்பலாம்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது இந்தி திணிப்பு மட்டும் இல்லை இது தமிழக மாணவர்களை குலக்கல்வி திட்டத்துக்கு நெட்டித் தள்ளும் உத்தியே அல்லாமல் வேறில்லை எனலாம். கொஞ்சம் அசந்தாலும் 3, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எனும் மூன்று பொறிகளில் ஏதாவதொன்றில் சிக்கவைத்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும் சூழ்ச்சியே. முதலில் வந்தது NEET. பல மாணவர்களின் உயிரைப் பறித்தது. அடுத்து குலக் கல்வி முறை. லேட்டஸ்ட் பகல் வேஷத்தில் வருவது இது. சேரா விட்டால் மொத்த கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என்று குரல்வளையை நெறிக்கும் திட்டமாக வருகிறதே. ஒருவர் அரசியல் செய்ய வேண்டாமென்கிறார். அப்போ இந்தியை எதிர்த்ததுக்காகவே ஆட்சியில் அமர்த்தினார்கள். இன்றைய நிலைமையோ இங்கு மக்கள் யாரும் இந்தியை எதிர்த்தால்தான் ஓட்டு போடுவோம்னு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கவில்லை. நெல்லிக்காய் மூட்டையா இருக்கிறதே. நம்மூரில் அத்தனை பெரிய மனுஷன் கையை பிடிச்சி இழுத்தாங்கரத்துக்காக அவிசாரியா போவாளான்னு ஒரு பழமொழி. ஒரு சிலர் அடி பணிந்து சேர்ந்து விடுவோம் என்கிறார்கள். ஏற்கனவே இப்படித்தான் பயந்து பயந்து வேலியோடு போன பலவற்றை எடுத்து விட்டுக்கொண்டுள்ளது தமிழநாடு. நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் நூற்றுக்குமேல் இங்குதான் வட நாட்டிலில்லை. இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்த அல்ல. மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல். பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் இந்த மாநில மக்களுக்கு வரப்போகும் ஆபத்தை அநீதியை எடுத்து சொல்கிறார்கள். பொறுப்பற்றவர்கள் ஏதேதோ உளறுகிறார்கள். ஆளுங்கட்சியா எதிர்கட்சியா என்பதில்லை. பொறுப்பான அரசியல்வாதியா, நாடாளத் தகுதியானவனா இருக்க வேண்டாமா? முன்னொரு காலத்தில் இந்தி திணிப்பு வந்ததை தடுத்து நிறுத்தினார்கள். இப்போது வருவதோ அதைவிட பன்மடங்கு தீங்கு விளைப்பதாக அமையும் என்பது உறுதி. ராஜாஜி கொண்டுவரப் பார்த்த குலக்கல்வியை மீண்டும் முயற்சிக்கிறார்கள். அதன் விளைவுகள் என்ன என்று சொல்லி தடுத்தது தமிழக அரசு. மக்களும் அதை புரிந்து கொண்டு எதிர்த்தார்கள். அதன் காரணமாக திட்டத்தின் பெயரை மாற்றி டில்லி தர்பார் கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை இந்தியை சேர்ப்பது மட்டுமல்ல. மூன்றாம் ஐந்தாம் எட்டாம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருகிறார்கள். தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் எடுத்துக் கொள்ளும் அக்கறை, முயற்சிகள், உழைப்பு நாடறிந்ததே. இப்படியிருக்க அந்த தேர்தல் ஜுரம் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு பாலகர்களுக்கும் வரும் என்றால் மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆசிரியர் என்று அனைவருக்குமே தொடர்ச்சியான நெருக்கடியை சிரமத்தை ஏற்படுத்தும். இந்த தேர்வுகளில் பெயிலானால் மறு வாய்ப்பு கிடையாது படிப்பை விட்டு வெளியேறவேண்டும் என்றும் சட்டம் சொல்லியுள்ளது. மாணவர்களை குலக்கல்வி தொழிற்கல்வி திட்டத்துக்கு தன்னால் அனுப்ப ஒரு மாற்றுவழி கொண்டு வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் நல்ல எதிர்காலத்தில் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் யாரும் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
திமுக தப்பா கோபிக்கக் கூடாதுன்னு பழனிச்சாமி கவலைப்படுறார் ....
EPS இனி நிறைய நீக்கம் செய்ய வேண்டி இருக்கும். மக்கள் மன நிலை அறியாத ஒரு தலைவர் ,?
நீக்கியது சரியான முடிவுதான்
எல்லா மொழிகளும் இறைவன் படைத்தவை தான் பல மொழிகள் தெரிவது சிறப்பு பணம் இருப்பவன் தான் படிக்க முடியும் என்கிற நிலை மாற வேண்டும்.
எல்லா மொழிகளும் இறைவன் படைத்தவை தான் பல மொழிகள் தெரிவது சிறப்பு என்று சொல்றார் இவர். ஆனாலும் இறைவனுக்கு ஒருமொழிதான் தெரியும் என்கிறர்களே. கருவறைக்குள் அனைத்து மொழிகளும் நுழைய முடியாதுன்னு சொல்றாங்களே. அதுக்கு இவர் பதில் சொல்வாரா? பல மொழிகள் கற்க கூடாதுன்னு இங்கே எவரும் சொல்கிறார்களா? மாநில அரசாங்கம் பொறுப்பேற்று பல்லாயிரம் அரச பள்ளிகளிலும் சொல்லித் தர வேண்டுமென்று சட்டம் போடுபவர்கள் அதற்கான செலவை கட்டமைப்புகளை செய்து தருவார்களா என்றால் பதிலில்லை? யாராவது வலிக்க வலிக்க பிள்ளை பெற்றால் மோடி இன்ஷியலை போடணும்னு அடம் பிடிப்பதோடு சரி. அது சரியென்று ஒத்து ஊத இங்கே சிலதுகள்.
இறைவன் அணைத்து மொழிகளையும் விரும்ப கூடியவன் தமிழ் மிகவும் பிடித்த மொழி தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் தமிழில் தான் உள்ளது அன்பரெய்.