உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடம் மாறும் தமிழகம்: ஹிந்து முன்னணி வேதனை

தடம் மாறும் தமிழகம்: ஹிந்து முன்னணி வேதனை

திருப்பூர்: 'அரசின் தவறான செயல்பாட்டால், தமிழகம் தடம் மாறிப் போகிறது' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. வாலிபர்கள் போதைக்கு அடிமையாகி பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கின்றனர்.கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, அதிலும், சாராயத்தை விற்றவருக்கும் அரசு 10 லட்சம் ரூபாயை வாரி வழங்கியது. இதனால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு ஏன் என்று தமிழக அரசு சிந்தித்ததா? உயிர்கள் போன பின்பு நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகம்.பீஹாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகமோ மீளமுடியாத அளவு போதையில் செல்கிறது. மது ஆலைகளை நடத்தும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது.தமிழக அரசு மது விற்பனையை அதிகப்படுத்தச் சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டந்தோறும் திறந்தாக வேண்டியது அவசியம். முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்குத் தீர்வு தராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vathsan
ஜூன் 21, 2024 11:50

சரி காடு... பாண்டிச்சேரில திரும்பின பக்கமெல்லாம் மதுக்கடைதான். அங்கே நிப்பாட்ட சொல்லு பாப்போம். எங்க எழவு விழுது கலவரம் பண்ணலாம்னு பாக்கக்கூடாது. சாராய சாவு மிகவும் வருந்தத்தக்கது, அதற்கு காரனமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும். மக்களும் குறைவான விலையில் கிடைக்கிறது என்று கண்டதையும் குடிக்கக்கூடாது. திமுக அரசு இரண்டாவது முறை தவறிவிட்டது. இனிமேல் இதுபோல எப்போதும் நடக்காமல் நடக்கவேண்டியது முதல்வரின் கடமை. அதற்கு, சாராய வியாபாரிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை கொடுப்பதுதான் தீர்வு. முதல்வரும் சாராயம் விற்பவர்களை ரிப்போர்ட் செய்ய hotline, மொபைல் ஆப்ஸ், வெப் சைட் கள் அமைத்து அதில் சிக்கும் நபர்களை சரியாக நொங்கு எடுக்க வேண்டும். ஒரு முதல்வராக ஊர் ஊரக போய் கண்காணிக்க முடியாது. ஆனால் சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள லோக்கல் இன்ஸ்பெக்டர், SP , டிஜிபி போன்றவர்கள் பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கை இருக்கவேண்டும். கள்ள சாராயம் குறித்து awareness ஏற்படுத்துவதுதான் உடனடி தீர்வு.


அரசு
ஜூன் 21, 2024 07:53

இவர் விடுக்கும் அறிக்கைகளுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள். இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?


venugopal s
ஜூன் 21, 2024 07:47

எல்லா போதைகளையும் விட மிகவும் ஆபத்தானது மதம் என்ற போதை தான். அதை முதலில் தடை செய்ய வேண்டும்! உலகப்போரில் இறந்தவர்களை விட மதக்கலவரங்களில் இறந்தவர்கள் தான் அதிகம்!


பேசும் தமிழன்
ஜூன் 21, 2024 07:20

தமிழகத்துக்கு திராவிடம் தேவையில்லை.... தமிழக கட்சிகள்..... தமிழர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் கட்சிகள் மட்டும் போதும்.


Sivabalan
ஜூன் 21, 2024 06:56

தமிழகம் தடுமாறவில்லை. தவறு நடந்துள்ளது. அதை அரசு கவனிக்கவேண்டும். இப்போது தடுமாறுவது டெல்லிதான்.


Sivabalan
ஜூன் 21, 2024 06:51

பாஜகவில் உள்ள ரவுடியிசத்தை விட வேறு எங்கும் கிடையாது.


Kasimani Baskaran
ஜூன் 21, 2024 06:25

போதைகளுக்கெல்லாம் பெரியது திராவிட போதைதான். அதை வைத்துத்தான் ஆட்சி நடத்துகிறார்கள். தொன்மையான தமிழ் சமுதாயத்தையே ஸ்டிக்கர் ஒட்டி திராவிடன் என்று போதையில் வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.


Svs Yaadum oore
ஜூன் 21, 2024 07:32

திராவிடன் என்று போதையில் வைத்திருக்க மிக முக்கிய காரணம் காசு பணம் மற்றும் இங்குள்ள தரைமட்டமான திராவிட பள்ளி கல்வி. அரசு பள்ளி ஆசிரியர் கூட்டம் மொத்தமும் திராவிடம் .. மாற்று மத கருத்துக்களை பள்ளி பாடத்தில் நுழைப்பது .... ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் தமிழ் பாடத்திலிருந்து நீக்குவது .. தமிழ் தலைவர் என்றால் திராவிட தலைவர்கள்தான் ....மற்ற தலைவர்கள் எல்லாம் ஜாதி சங்க தலைவராக மாற்றி விட்டார்கள் .. மற்றொரு காரணம் காங்கிரஸ் கொண்டு வந்த அரசியல் சட்டம் ...அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுபான்மை மத கல்வி போதிக்கலாம் ....ஆனால் மற்ற CBSE பள்ளியில் ஹிந்து மத போதனை கூடாது ...


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2024 05:39

நீங்க என்ன சொன்னாலும் டேஸ்மாக் கொண்டுவந்தவனுக்கு தான் தமிழகத்தில் மரியாதை கொடுப்பானுங்க


Appan
ஜூன் 21, 2024 05:31

திமுக ஏன்றாலே ரவுடிசம், கள்ள சாராயம். நில அபகரிப்பு, , கட்ட பஞ்சயாத்து ..தலை விரித்து ஆடும் ..பத்து வருடம் காத்து இருந்து அவர்களின் வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளார்கள் ..தமிழகம் தாங்குமா ..?


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூன் 21, 2024 05:17

இவரே தடம் மாறி அட்மட் வில் சேர்ந்தவர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை