மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: தென்காசி மாவட்டம், குறிஞ்சான்குளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் இருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதை தமிழக பா.ஜ., சார்பில் வரவேற்கிறோம்.குறிஞ்சான்குளத்தில், கிராபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியிருந்ததாக அறிகிறோம். இதற்கு குறிஞ்சான்குளம் மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது, அதை ரத்து செய்ய, தமிழக பா.ஜ., எடுத்த முன்னெடுப்பை போல, தாது மணல் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை தற்காலிகமாக ரத்து செய்துள்ள, மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 32
6 hour(s) ago | 13