உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் வதந்தி; ஒக்கியம் மடுவு பாலம் விவகாரத்தில் சென்னை மெட்ரோ சொல்வதைக் கேளுங்க!

அதெல்லாம் வதந்தி; ஒக்கியம் மடுவு பாலம் விவகாரத்தில் சென்னை மெட்ரோ சொல்வதைக் கேளுங்க!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கப் பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ​சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை பணிகள் குறித்த சமீபத்திய அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக விவாதங்களை தெளிவுபடுத்த விரும்புகிறது.

அதிகரிக்க முடிவு

​டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்னையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப் பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

புதிய பாலம்

​நீர்வளத் துறையின் வேண்டுகோளின் படி, இந்த முக்கியமான பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னர், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் இதில் அடங்கும்.

ஒக்கியம் மடுவு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முக்கியமான நீர்வழிப்பாதை பற்றிய பொதுமக்களின் அக்கறையை கருத்தில் கொண்டு, தற்போதைய இந்த பணி மழைநீர் வெளியேற்றும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதனால் அடுத்த பருவமழையில் (வரவிருக்கும் பருவமழை அல்ல) அதிகரிக்கப்பட்ட நீர்வழிப்பாதை கொண்ட பாலம் தயாராகும்.​

பருவமழைக்கு முன்பு

வரும் பருவமழைக்கு பின்னர், அடுத்த பருவமழைக்கு முன் இந்தப் பணியை முடித்து, ஓக்கியம் மடுவுபாலம் எதிர்கால கனமழையை சிறப்பாக தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும். தற்போதுள்ள பணிகள் எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள நீர்வழிப்பாதை மடுவின் அடித்தள நிலை வரை சரிசெய்யப்படும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
ஆக 14, 2024 22:00

Do not be hurry to comment without understanding the intricacy of work. Now metro phase 2 corridor 3 work is going on and it should cross Okiyam Madu near Karapakkam . Existing waterway is not adequate to handle flood water . Existing bridge is going to be dismantled to enlarge the water passage so that during floods in Buckingham canal , overflow water will move smoothly into Pallikaranai marshlands. Now these works are entrusted to Chennai Metro as part of metro work .


VENKATASUBRAMANIAN
ஆக 14, 2024 08:09

திராவிட மாடல் அரசு இப்போது அடுத்த கொள்ளைக்கு வழி தேடுகிறது. 60 வருடங்களாக இரண்டு கழகங்களும் ஆட்சி செய்ததின் லட்சணம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ