உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'கல்வித்துறை வெளியிட்டுள்ள நடப்பு கல்வியாண்டிற்கான வேலை, விடுமுறை நாட்கள் குறித்த உத்தேச கால அட்டவணை (காலண்டர்) ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தும்' என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.இந்த கால அட்டவணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இல்லாதது உள்ளிட்ட சில மாற்றங்கள் இருந்தாலும் ஆசிரியர்கள், மாணவர்களை மறைமுகமாக பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு எதிராக இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 19 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கல்வியாண்டில் ஜூன் 3க்கு பதில் 10ல் அதாவது 5 வேலை நாட்கள் தள்ளி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேநேரம் ஏப்., 17 பள்ளி கடைசி வேலை நாள் எனக் கூறிவிட்டு, நிர்வாக காரணங்கள் என குறிப்பிட்டு ஏப்., 28 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இது ஆசிரியர்களை பழிவாங்கும் செயலாக கருதுகிறோம்.கடந்த சில ஆண்டுகளாக மே முழுவதும் ஏதாவது வேலை எனக் கூறி ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் பிற அரசு ஊழியர்களை போல் ஆசிரியர்களுக்கும் 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்க அரசு முன்வருமா.மேலும், ஆறு முதல் எட்டு மற்றும் ஒன்பது முதல் பிளஸ் 2 என தனித்தனியாக காலஅட்டவணையை அறிவித்துள்ளது. இதில் 'அறு முதல் 10ம் வகுப்பு வரை முதல்பாட வேளை தமிழ் கற்பிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 99 சதவீதம் உயர்நிலை பள்ளிகளில் 5 ஆசிரியர்களே உள்ளனர். அதில் தமிழாசிரியர் ஒருவர். அவர் அனைத்து வகுப்புகளுக்கும் (ஆறு முதல் 10 வரை) முதல் பாடவேளையாக தமிழ் பாடம் எவ்வாறு கற்பிக்க முடியும்.புதிய அட்டவணையில் நாள் ஒன்றுக்கு ஒரு வகுப்புக்கு 8 பாடவேளைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாரத்தில் 40 பாடவேளைகள் வருகின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் 5 ஆசிரியர்களே உள்ளனர். அவர்கள் 'ரெஸ்ட் பீரியடு' இன்றி நடத்த முடியுமா. இதுவரை வாரம் 28 பாடவேளை தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கல்விசார், கல்விசாராத செயல்பாடுகள் என தனித்தனியே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளுக்கான ஆசிரியர்கள் யார் என குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.கூடுதலாக 19 சனிக்கிழமைகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது என்பது கூடுதல் கற்றல் நாட்களை அவர்கள் பெற்றனர் என்ற புள்ளி விவரத்திற்கு மட்டும் தான் பயன்படும்.அதுபோல் '5 கற்பித்தல் நாட்கள், 2 விடுமுறை நாட்கள்' என்பதில் அந்த 2 நாட்களிலும் அவர்கள் பொழுதை வெறுமனே கழிப்பதில்லை. அடுத்த 5 நாட்களுக்கான திட்டமிடல்களை தயார் செய்கின்றனர். திட்டமிடல் நாட்களை குறைப்பது போன்ற நெருக்கடிகள் உளவியல் ரீதியாக ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும். இதன் விளைவு தேர்வு முடிவுகளில் தெரியும் என்றனர்.கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது உத்தேச காலண்டர் தான். இதுகுறித்து கருத்துக்கள், ஆலோசனைகளை gmail.comஎன்ற இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Senthamarai M A
ஜூன் 11, 2024 22:12

சும்மா உட்கார வச்சி வருடம் முழுக்க , வெட்டியாக அதிக சம்பளம் மட்டும், கொடுத்தால் ஆசிரியர்களுக்கு திருப்தியாக இருக்கும். அரசு ஊழியர் அனைவரும் எல்லா வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்போது இவர்களுக்கு மட்டும் எதற்கு கோடை விடுமுறை? மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விட்டு, ஆசிரியர்களுக்கு வேறு வகை வேலைகளை அளித்தால் என்ன? மற்ற துறை வேலைகளை பகிர்ந்து அளிக்கலாம்


Bhaskaran
ஜூன் 11, 2024 17:10

மழை என்றால் விடுமுறை உள்ளூர் திருவிழா என்றால் விடுமுறை தீபாவளிக்கு இரண்டு நாள் பொங்கலுக்கு அந்த வாரம் முழுவதும் விடுமுறை இதுக்கெல்லாம் ஓகே ஆனா மாதம் இரண்டு சனிக்கிழமை வேலேநாள்வச்சு பாடங்களை முடிக்கவேண்டும்


sri
ஜூன் 11, 2024 12:22

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் நாற்பது பாடவேளை நடத்தமுடியாது போன்ற கோரிக்கைகள் ஏற்கலாம். மே மாதம் ஆசிரியர்களை பணிக்கு வரச்சொல்வதை விதிமீறல் போல கட்டுரை உள்ளது. மே மாதம் ஊதியம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுகிறது தானே. காலாண்டு அரையாண்டு விடுமுறைகள் மாணவர்களுடன் ஆசிரியர்களும் அனுபவிக்கிறீர்கள். அந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டும் அளித்தால் போதும் என நீங்கள் கூறத்தயாரா. வேறு எந்த அரசுத்துறைக்கும் இதுபோல் சலுகைகள் இல்லை அதை நீங்கள் நினைவு கூறவும். நீங்கள் பெறும் ஊதியம் மக்களின் வரிப்பணம். பெரும்பாலும் ஏழைக் குழந்தைகள்தான் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 12:04

நிறைய அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகளைத் துவக்கி விட்டனர். ஆனால் ஆங்கில பாடம் நடத்த ஆங்கில இலக்கியப் பட்டதாரி ஆசிரியர்களில்லை. தமிழாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. சமச்சீர் ஏமாற்று வேலை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2024 11:36

தமிழ் தமிழ் என்று கூவும் யாவாரிகள் தான் தமிழில் புலவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக பதவி வகித்த முறையை வழித்தனர். அதாவது எந்த ஆசிரியரும் எந்த பாடத்தையும் கற்றுக்கொடுக்கலாம் என்பதை தமிழ் மொழிக்கும் நீட்டித்தனர். இந்த உண்மை குவார்ட்டர் பிரியாணி பொட்டல உடன் பிறப்புக்களுக்கு தெரியுமோ?


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 11:10

அதனாலென்ன? ஈர வெங்காயம் காட்டுமிராண்டி பாஷை ஆதரவாளர்களை நல்ல குருவாக இருந்து வளர்த்தார். அதற்காக அவருக்கு யுனஸ்கோ, ஐநா, ஆஸ்கார், கிராமி, செவாலியே, மக்ஸஸே, டத்தோ விருதுகளும் பட்டங்களும் அளிக்கப்பட்டன என்று பாடம் நடத்த முன் தயாரிப்புககள் எதற்கு?


M Ramachandran
ஜூன் 11, 2024 10:28

ஜால்ரா ஊடகங்ககள் ஆசிரியர் மன உளைச்சலுக்கு இதற்கு மோடி தான் காரணம். பெரும்பான்மயான தமிழக மாக்கள் எவன் வந்தால் என்ன போலானாள் என்ன பிரியாணி பொட்டலத்துன் குடிக்க காசு வருதா அவனுக்கு மற்றது 1000 ரூபாய் விட்டே அறிந்தாலே மயங்கிய நிலையில் எவன் கேக்குரானோ அவனுக்கு ஓட்டு இந்தநிலையில் நீதி மன்றங்கள் இப்போ டிவி இல் வரும் பட்டி மன்றமாகி விட்டது போட்டா போட்டி. மாநிலங்களில் எவ்வளவு நான் சம்பாதித்தேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு வளம் வருவது.


GMM
ஜூன் 11, 2024 07:46

திராவிட கல்வி முறை உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அரசியல் தலைவர்கள் கருத்து மட்டும் அதிகம். தமிழகத்தில் முன்னோர்கள் எழுதிய ஏராள நீதி, சமய நூல்கள் உண்டு. அதனை மத சாயம் பூசி முற்றிலும் நீக்கி விட்டனர். உளவியல் நெருக்கடி உருவாக்கும் போதனைகள் நாட்டில் வேரூன்றி விட்டன. தடுப்பார் யாரும் இல்லை.


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 07:08

பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான விடியல் , பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...இதன் மூலம் பள்ளி ஆசிரியர் சுமையும் குறையும் ..ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்தால் பள்ளி தேர்வு அனைத்தும் இல்லாமல் செய்து திராவிட சமூக நீதியை நிலை நாட்டலாம் ....


chandru
ஜூன் 11, 2024 06:48

ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் ஆதரிக்கும் அரசுதானே இது


sethu
ஜூன் 11, 2024 08:59

உலகம் முழுவதும் கிருத்துவர்கள் தங்கள் வாழ பல பாரம்பரிய இனக்குழுக்களை கொன்று மதம் மாற்றி தனது சாம்ராஜ்யத்தை நிர்வகித்தனர் கடைசியில் பிரிட்டிஷில் இன்று ஒரு ஹிந்து பிரதமர் வரவேண்டியதாகியுள்ளது. 1939ல் இந்தியா சுதந்திரத்திற்காக போராடியபோது அண்ணாத்துரை என்ற அயோக்கியன் ரோமிற்கு சென்று போப் பை சந்தித்து கூட்டணி ஏற்படுத்திக்கொண்டான் இதுதான் வெள்ளை கிருத்துவனின் சூழ்ச்சி இன்று உலகில் முதல்மொழி என்ற தமிழுக்கு இழுக்காக ஒரு கிருத்துவன் முதல்வன், ஒருகிருத்துவன் கல்விக்கழக தலைவன் கிருத்துவ எண்ணம் கொண்ட பெரும்பாலான ஆசிரியர் சமூகம் + அரசு வூழியர்கள் மாவட்ட ஆட்சியர் ஆக அந்நியர்களின் கையில் இன்று தமிழகம் தெலுங்கனுக்கு கூட அறிவூ வந்துவிட்டது ஆனால் தமிழன் இன்னும் நல்ல தலைவனைத்தேடுகிறான் .


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி