உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை புறக்கணித்த பட்ஜெட்: அரசு ஊழியர்கள்

எங்களை புறக்கணித்த பட்ஜெட்: அரசு ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கரிசனம் இருப்பது போல, '2026 ஏப்., 1 முதல் செயல்படுத்தப்படும்' என, அடுத்த நிதியாண்டிற்கான அறிவிப்பாக வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை, இப்போதே வெளியிட்டுள்ளதை கண்டிக்கிறோம்.சரண்டர் வழங்குவதற்கான செலவினத்தை மேற்கொள்ள, 2026 - 27 பட்ஜெட்டில் தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று தெரிந்தும், எங்கள் மீது கருணை காட்டுவது போல, பொய்யான பிம்பத்தை கட்டமைத்துள்ளனர்.கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள். தற்போது, 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்கின்றனர். ஆனால், நான்கு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு இல்லை.ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளில், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த பின் வேறொரு நிலைப்பாடு. இது, முதல்வர் மீதான நம்பகத்தன்மையினை இழக்க செய்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட் மட்டுமின்றி, எங்களை முழுமையாக புறக்கணித்த பட்ஜெட்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ