உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவில் இருந்தபடி பைல் பார்க்கும் முதல்வர்

அமெரிக்காவில் இருந்தபடி பைல் பார்க்கும் முதல்வர்

சென்னை:அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடி அரசு பணிகளையும் கவனித்து வருகிறார். முக்கியமான கோப்புகளை படித்து, ஒப்புதல் அளித்து வருகிறார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார். அதேநேரம் அரசின் முக்கிய கோப்புகளை, அங்கிருந்தபடி, 'ஆன்லைனில்' ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்து வருகிறார்.இது தொடர்பாக, அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.அயலக மண்ணிலும், அரசு கோப்புகள் தேங்கிடாமல், 'இ- ஆபிஸ்' வழியாக பணி தொடர்கிறது' என்று குறிப்பிட்டு, கோப்புகளை பார்வையிடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ