உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுலா பயணியருக்கு நுழைவு கட்டணம் வெனிஸ் நகரம் அதிரடி

சுற்றுலா பயணியருக்கு நுழைவு கட்டணம் வெனிஸ் நகரம் அதிரடி

வெனிஸ்:உலகிலேயே சுற்றுலா பயணியருக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் முதல் நகராக 'வெனிஸ்' மாறியுள்ளது.இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரம் வெனிஸ். இந்நகருக்கு, அதிகளவில் சுற்றுலாப் பயணியர் வருகை தருவதால், அந்நகரமே நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் இங்கு சுற்றுலா வருகின்றனர். கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை சமாளிக்கும் விதமாக, இந்நகர நிர்வாகம் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது. இதன்படி, முக்கிய நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில், சுற்றுலா பயணியரிடம் கட்டணம் வசூலிக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 14ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த கால இடைவெளியில், குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டண முறை, இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, கட்டணம் தோராயமாக இந்திய ரூபாயில், 447 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், அதிக நெரிசல் இல்லாத சமயங்களில் பயணியர் தங்கள் வருகையை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ