உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்து குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழலில் மருந்து, நச்சுத்தன்மையின் தாக்கம் என்ற தலைப்பில், 'கரன்ட் சயின்ஸ்' ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:வளர்ச்சி அதிகரிக்கும் போது, ரசாயன கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைகின்றன. 43 சதவீத ஆறுகள், மருந்து கழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்கின்றன.தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளும் மனிதர்கள், விலங்குகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படி மாற்றங்கள் நிகழும் உயிரினங்கள் வெளியேற்றும் சிறுநீர், மலம் ஆகியவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை விதிகளின்படி அகற்றுவதில்லை. மருத்துவ கழிவு நீரை சுத்திகரிக்காமல், பொது கழிவுநீர் கால்வாயில் விட்டு விடுகின்றனர். சாதாரணமான குப்பையுடன் போட்டு விடுகின்றனர். இவை மண்ணில் புகுந்து மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும் அபாயகரமானதாக மாற்றுகின்றன.பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதைப் பொருள் பயன்பாடுகளாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஹைட்ரஜன் குளோரைடு, பென்சீன் மற்றும் டோலுயீன், கல்நார், காட்மியம், பாதரசம், குரோமியம், கீமோதெரபி கழிவுகள் ஆகியவை பெரும் ஆபத்தானவை, இதனால், மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதி சுதிர் அகர்வால், நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதை, இந்த ஆய்வுக் கட்டுரை எடுத்து காட்டுகிறது. மருந்துகள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அதன் பாதிப்புகளை குறைக்க, பல்வேறு ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.நோய் எதிர்ப்பு சக்திக்கான, 'ஆன்டிபயாடிக்' மருந்து பயன்பாட்டை ஆராய்வது; மருந்து கழிவுகள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது; மருந்து கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல்; போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த விதிகளை கடுமையாக்குதல்; தேவையான அளவு மட்டுமே மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக, மருந்து கழிவுகள் அபாயத்தை குறைக்க முடியும்.இது, இந்தியா முழுவதற்குமான பிரச்னை என்பதால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக மருந்து நிறுவனங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்த அறிக்கையில் விபரங்கள் தரப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
செப் 14, 2024 09:29

இதற்க்கே இப்படி அலட்டுபவர்கள் சென்னைக்கு நடுவில் ஓடும் கூவம் பற்றியும் கேள்வி கேட்கலாம்.


Barakat Ali
செப் 14, 2024 09:23

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கிறது ...... அதே சமயம் மலையாளிகள் தமிழர்களை பயன்படுத்திக்கொள்ள தயங்கவே மாட்டார்கள் ..... தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதிமூன்று வயதுச் சிறுமி கேரள முதல்வர் முன்னிலையில் தொடர்ந்து பல மணிநேரம் பரதம் ஆடி நிதி சேர்க்க உதவினார்.....


கூமூட்டை
செப் 14, 2024 08:17

திராவிட முன்னேற்றக் கழகம் மாடல். அரசு மற்றும் அரசியல் வியாபாரி எல்லோரும் இங்கு தான் வாழ்ந்த ஆகவேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் மாசுக்கட்டுப்பாட்டு சரியான முறையில் நடக்க வேண்டும். வாழ்க வளமுடன்


Svs Yaadum oore
செப் 14, 2024 07:07

ஆனால் இங்குள்ள முதல்வர் ஓணம் பண்டிகைக்கு சமூக நீதி மத சார்பின்மையாக கேரளாவுக்கு மலையாளத்தில் வாழ்த்து சொல்வாரு ... .தமிழ் தமிழன் தமிழன்டா என்பதெல்லாம் இப்பொது ஓடி ஒளிந்துவிடும் ...ஆனால் மத்திய நிதி அமைச்சர் தமிழனை அவமானப்படுத்திவிட்டாராம் .... கேரளா மருத்துவ கழிவைக்கூட நிறுத்த முடியவில்லை ...இந்த லட்சணத்தில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் ...


N Annamalai
செப் 14, 2024 06:43

கேரளாவில் இருந்து பொள்ளாச்சியில் கொட்டும் கழிவுகள் தரமான இயற்கை உரம் என்று நினைக்கிறன் .அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை