உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைக்கு எதிராக போராட்டம் ஹிந்து முன்னணி அழைப்பு

போதைக்கு எதிராக போராட்டம் ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தி.மு.க.,வைச் சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தனது காரில், 600 கிலோ குட்கா கடத்தியது சிவகிரி செக்போஸ்ட்டில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது மனைவி தென்காசி மாவட்ட கவுன்சிலர்.தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் கடத்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. வேலுார் மாவட்டத்தில், ஒரே நாளில், 2,500 லிட்டர் கள்ளச்சாராயம், ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது.தொடர்ச்சியான கைதுகள், சட்ட விரோத போதை பொருள் விவகாரத்தில் தி.மு.க.,வினர் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனரோ... இதை முதல்வரும் கண்டும் காணாமல் இருக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.போதை கடத்தல் மட்டுமல்லாமல், கனிமவள சுரண்டல்களிலும், தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வருகிறது. எனவே, அரசை அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க, மக்கள் போராட்டம் தவிர வேறு வழியில்லை. எனவே, மக்கள் பகிரங்கமாக போதை பொருட்களுக்கு எதிராக, செயலற்ற அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S Regurathi Pandian
ஏப் 28, 2024 13:30

எந்த ஒரு அநியாயத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டமே தீர்வு எல்லா கட்சிகளும் இதற்கு எதிராக உள்ளனர்


vivasayi
ஏப் 28, 2024 10:53

குஜராத்ல மிக பெரிய போதைப்பொருள் குடோன் இருக்குதுன்னு போட்டுருக்காங்க


Rajarajan
ஏப் 28, 2024 07:52

இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டார்கள் பிராமண எதிர்ப்பு போராட்டம் என்று நடந்தால், வீரமணி முதல் திராவிட அல்லக்கைகள் / திராவிட அடிப்பொடிகள் வரை கூட்டம் கூட்டமாக, ஆரவாரத்துடன் வருவார்கள் நல்லா பண்ராறயா தமாசு


Kasimani Baskaran
ஏப் 28, 2024 07:51

தீம்கா அரசு போராட்டம் செய்பவர்களை சுட்டுத்தள்ளக்கூட தயங்காது


T.sthivinayagam
ஏப் 28, 2024 05:34

சொம்பு கட்சி செய்யும் குஜராத்தில் முதலில் போராட்டம் செய்யுங்கள் இந்து பின்னணி மக்கள் வேண்டுகொள்


Kasimani Baskaran
ஏப் 28, 2024 07:51

தனகு முதுகில் இருக்கும் அழுக்கை முதலில் கவனித்து அடுத்த பின்தங்கிய மாநிலத்தை கவனிக்கலாம் அயலக அணியில் வேலை உங்கள் கட்சிக்கு தெரியாதா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ