வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தொடை நடுங்கிகள்...
ஏன் அப்படி செய்யப்பட்டது
தமிழக அரசின் இருமொழி கொள்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மும்மொழி எதிர்ப்பு பற்றி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னை இலக்கிய திருவிழாவில் நேற்று பேசினார்.அவர் பேசிய மும்மொழி எதிர்ப்பு கருத்துக்களை ஒரு வரி விடாமல் நீக்கி, செய்தித்துறை குறிப்பு வெளியிட்டுள்ளது.பொது நுாலகத்துறை சார்பில், தமிழகம் முழுதும் ஐந்து வகையான இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை இலக்கிய திருவிழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது.துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:இன்றைக்கும் மொழி திணிப்பு நடக்கிறது. அதனால், இருமொழி கொள்கையே போதும் எனவும், புதிதாக எந்த மொழியும் திணிக்க வேண்டாம் என்றும், முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.அதை நீங்கள் மறக்கக்கூடாது. அந்த வகையில், மொழி, கலாசாரத்தை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசும், முதல்வரும் ஈடுபட்டுள்ளனர். இலக்கிய திருவிழாவுக்காக தமிழக அரசு, 1.85 கோடி ரூபாய் ஒதுக்குகிறது என்றால், மொழி மீது முதல்வர் வைத்திருக்கிற அன்பும், மரியாதையும் தான் காரணம். இதுபோன்ற இலக்கிய திருவிழாக்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். தமிழ் மொழியை என்றும் போற்றி பாதுகாக்க வேண்டும்.தாய் மொழியில் சிந்திப்போம்; உலக மொழியான ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வோம். நம் பிள்ளைகள் ஆசைப்பட்டால், 10 மொழிகளை கூட படிக்கட்டும். ஆனால், எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது. எங்களுக்கு தேவை என்றால் படிக்க போகிறோம். மறைமுகமாக ஒரு மொழியை திணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, தமிழக மண். இங்கே இன்னொரு மொழி நுழைந்துவிடாது என, திட்டவட்டமாக சொல்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு பின், மாவட்ட செய்தி துறை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், அமைச்சர் மகேஷ் பேச்சில் மும்மொழி எதிர்ப்பு குறித்த கருத்துகள் இடம் பெறவில்லை. அந்த கருத்துகளை நீக்கிவிட்டு, செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -
தொடை நடுங்கிகள்...
ஏன் அப்படி செய்யப்பட்டது