உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயங்கொண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல் விடுத்தவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல் விடுத்தவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை பெண்ணின் கணவருக்கே அனுப்பி பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவர் சென்னை கோயம்பேட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழிக்கும் வட வீக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சிவா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக சிவா மிரட்டி உள்ளார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாவின் அழைப்பை கனிமொழி நிராகரித்துள்ளார் இந்நிலையில் கனிமொழிக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா கனிமொழியுடன் படுக்கையில் இருந்த போது எடுத்த வீடியோவை வைத்து கனிமொழியை மிரட்டியுள்ளார். மேலும் சிவா தன்னிடம் உள்ள வீடியோவை கனிமொழியின் கணவர் முருகனுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shakti
மே 06, 2024 15:53

பெயர் ஒன்றே போதுமே ???


Mani . V
மே 06, 2024 04:34

எப்படி இருந்தாலும் குலவிளக்கு, குடும்ப குத்து விளக்கு கனிமொழி கில்லாடிதான் அவரின் சமூகச் சேவையை நாம் கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும்


DARMHAR/ D.M.Reddy
மே 06, 2024 01:58

இவன் போன்ற கழிசடைகளை போலீசார் கைது செய்து முதுகில் சாட்டையால் ஒரு பாத்து அடிகள் கொடுத்தால் தான் திருந்த வழியுண்டு


Sridhar
மே 05, 2024 21:07

பெண்ணின் பெயரை சொல்லக்கூடாது எழுதக்கூடாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை