உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு புத்தக கோடவுனில் நோட்டு திருடியவர் கைது

அரசு புத்தக கோடவுனில் நோட்டு திருடியவர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு புத்தக நோட்டு கோடவுனில் நோட்டுகளை திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 128 அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக நோட்டு, புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கோடவுனில் கதவை உடைத்து 12 பெட்டிகளில் இருந்த கிராப் நோட்டுகளை மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடி சென்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் புகாரில் கேணிக்கரை போலீசார் நோட்டுகளை விற்பனை செய்த கடையை கண்டறிந்து மீட்டனர்.விசாரணையில் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்த நவாஸ்ெஷரீப் 32, என்பவரை கைது செய்தனர். அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை