உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும்: மதுரை ஆதீனம்

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும்: மதுரை ஆதீனம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் நேற்று அளித்த பேட்டி: ஏகாம்பரநாதர், ஒணகாந்தேஸ்வரர் என, ஐந்து பாடல் பெற்ற சிவ தலங்கள் உட்பட பல சிவாலயங்கள் நிறைந்தது காஞ்சிபுரம். இந்த ஊரில் தான் ஞானசம்பந்தர் நடந்து சென்று கோவில்களை தரிசித்தார். பல்வேறு சிறப்புகளை உடையது காஞ்சிபுரம்.அரசியல் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில், இது ஜனநாயக நாடு. எனக்கும் ஓட்டளிக்கும் உரிமை இருக்கிறது. நானும் தொடர்ந்து ஓட்டளிக்கிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருப்பது நல்லது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஏனெனில், அந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது.நித்யானந்தா மதுரை ஆதீன மடத்தை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவர் இனிமேல் மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய முடியாது. நானும் விடமாட்டேன். அவர் இந்தியாவிற்குள் வந்தாலே கைது செய்யப்பட்டு விடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bala
ஜூன் 18, 2024 11:43

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக அமோக வெற்றிபெறும். திமுக மண்ணை கவ்வும்


D.Ambujavalli
ஜூன் 18, 2024 06:15

‘தலைப் பிள்ளை ஆண்பிள்ளை, தப்பினால் பெண்பிள்ளை’ என்று ஜோசியம் கூறினாராம் ஒருவர் இடைத்தேர்தல் என்று ஆளும் கட்சிக்குத்தான் என்பது எழுதப்படாத சட்டம் ஆயிற்றே


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ