உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார் விடுகதைக்கு போலீஸ் அளித்த அதிர்ச்சி பதில்

யார் அந்த சார் விடுகதைக்கு போலீஸ் அளித்த அதிர்ச்சி பதில்

சென்னை: 'சார் என்ற நபர் யாரும் இல்லை; மாணவியை மிரட்ட ஞானசேகரன், சம்பவ இடத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்' என, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.சென்னை பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசகேரன், 37, கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் அவர் மொபைல் போனில் பேசும்போதும், அந்த மாணவியை மிரட்டும்போதும், 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இதனால், 'யார் அந்த சார்' என கேள்வி எழுந்தது.இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இக்குழுவினர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதன் பின், இந்த வழக்கு, சென்னை பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், சம்பவ இடத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து, ஞானசேகரன் அளித்த வாக்குமூலம் இடம்பெற்று உள்ளது.அதாவது, 'சம்பவத்தன்று இரவு 7:45 மணியளவில் குறைந்த வெளிச்சமே இருந்த இடத்தில், காதலருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி உள்ளார்.முகத்தை மறைக்க தொப்பி அணிந்துள்ளார். காதலருடன் நெருக்கமாக மாணவியை இருக்க வைத்து, தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்; அதை, விடுதி காப்பாளரிடம் காட்டி விடுவதாக மிரட்டி உள்ளார். மாணவியை மிரட்டவே, 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்' என, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

netrikannan
மார் 14, 2025 08:04

சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் அந்த சார் மா சு என்று. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் பாவம் விட்டுவிடு, படைத்தவன் இருப்பான் பார்த்துக்கொள்வான் .


lakshmikanthan S.B
மார் 13, 2025 23:16

சவுக்கு சங்கர் போலீஸ்காரரிகளை பற்றி சரியான முறையில்தான் சொல்லி உள்ளார்.


Mediagoons
மார் 13, 2025 21:27

அதனால்தான் டாஸ்மாக் ரெயிடு. காவல்துறையில் உள்ள ஏஜெண்டுகளை வைத்து அனைத்தையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு தங்கள் மீது அனைவரும் காறித்துப்புவார்கள் என்று தெரிந்து கொண்டு மத்திய குண்டர்களை ஏவி பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
மார் 13, 2025 20:59

திராவிட மாடல் பதில் என்று கொள்ளலாம்


தமிழன்
மார் 13, 2025 19:38

இதை சொல்ல இவ்வளவு நாளா இதை தான் கமிஷனரே சொல்லி விட்டாரே என யோசிக்க போறீங்க.. அவுங்க வேலை செய்ததாக நீதி மன்றம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. உங்கள் எண்ணத்தில் "உதய"மான அந்த சார் என்பது இன்னும் மனதில் நிழலாடுகிறதா?


PR Makudeswaran
மார் 13, 2025 18:19

ஏழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் உங்களை சும்மா விடாது. மக்கள் வரிப் பணத்தில் காசை வாங்கிக்கொண்டு நியாயமா இது? நாளை உங்களுக்கும் பிள்ளை வாரிசு எல்லாம் வரும். இறைவன் பார்த்து கொள்வான்.


Naga Subramanian
மார் 13, 2025 17:54

இஸ்ரேல் மொசாட்-யைத்தான் துப்பு துலங்க கூப்பிட வேண்டும்.


K V Ramadoss
மார் 13, 2025 16:16

Does not appeal to commonsense....


SIVA
மார் 13, 2025 14:41

அய்யா இதோட விசாரணைய முடிச்சுக்கோங்க இதுக்கு மேல விசாரிச்சா அந்த பொண்ணு தான் பிரியாணி கடை வைத்து இருந்த அந்த அப்பாவி ஞான சேகரனை அண்ணா யூனிவெர்சிட்டி கடத்தி வந்தார் என்ற உண்மையும் வெளி வந்து விடும் போதும் இதோட நிறுத்திக்கலாம், ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்கள் தொல்லையே எங்களால தாங்க முடியல இதுல நீங்க வேற அவங்க மாதிரியை பண்றீங்க, நீங்கள் சேர்க்கும் சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு போகின்றோத இல்லயோ நீங்கள் சேர்க்கும் பாவம் கோடான கோடி மடங்காக உங்கள் வாரிசுகளுக்கு போய் சேரும் அதை மனதில் வைத்து எதையும் செய்யுங்கள் ......


Oru Indiyan
மார் 13, 2025 12:54

துப்பு கெட்டவங்க துப்பரிஞ்சா இப்படி தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை