உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்

கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்

மதுரை: ''கட்சிக்கு இது களையுதிர் காலம். கட்சியில் இருந்து இயங்குவதற்கும், வெளியேறி செல்வதற்கும் காளியம்மாளுக்கு முழு உரிமை உண்டு,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: இந்த கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. விரும்பி இயங்குவதற்கும், விருப்பம் இல்லையெனில் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. தங்கச்சியை (காளியம்மாள்) நான் தான் அழைத்து வந்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3qbgulo5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. பக்கத்துல நிற்பவர் கூட நாளைக்கு வேறு ஒரு அமைப்புக்கு போகலாம். வரும்போது வாங்க வாங்க வணக்கம் என்போம். போகும்போது போங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் என்று சொல்வோம். இது எங்களுடைய கொள்கை. பருவ காலத்தில் இலையுதிர் காலம் இருக்கிறது. எங்க கட்சிக்கு இது களையுதிர் காலம்.காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருக்கிறதா, கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை தி.மு.க., எதிர்ப்பது என்பது பொய். எங்கள் மொழி மீது எங்களுக்கு பற்று இருப்பது தேசத்துரோகம் அல்ல.

கொள்கை

மும்மொழியில் எம்மொழி இருக்க கூடாது என்ற கேள்வி எல்லாருக்கும் வரும். எல்லா மொழியையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழி. ஆங்கிலம் பயன்பாட்டு மொழி. விரும்பினால் எம்மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்பது தான் கொள்கையாக தான் இருக்க வேண்டும். விருப்பம் என்றால் பன்மொழி கற்கலாம் என்று கொண்டு வாருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தாமரை மலர்கிறது
பிப் 22, 2025 21:10

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சாணக்கியத்தனத்தால், திராவிட விஷச்செடியை களைய, ....ல் உருவாக்கப்பட்ட இன்னொரு விஷச்செடி தான் நாம் தமிழர் கட்சி.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 22, 2025 23:50

தாமரை மலர்கிறது.


Krishnamurthy Venkatesan
பிப் 22, 2025 19:52

மூன்றாவது மொழிக்கு தேர்வு இல்லை என சொல்லலாம். ஆனால் மாணவர்கள் வகுப்பிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று கொண்டுவர வேண்டும்.


nv
பிப் 22, 2025 19:37

சீமான் ஒரு தேச துரோகி .. இவரை நாடு கடத்த வேண்டும்.. இவர் பெரியாரை பற்றி பேசியது சரி ஆனாலும் LTTE, பிரபாகரன் பற்றி புகழ்வதும், பாரத தேசத்தின் எதிராக பேசுவதும் கு‌ற்ற‌ம்..


Haja Kuthubdeen
பிப் 22, 2025 16:33

தனித்துதான் நிற்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்பவுமே இலையுதிர் காலம்தான் சீமானுக்கு.


Sampath Kumar
பிப் 22, 2025 15:57

உன்னையும் சேர்த்துக்கோ சீமாறு


ராமகிருஷ்ணன்
பிப் 22, 2025 15:26

தலையே களையா முள்ளு செடியாக இருக்கே, அதுக்கு என்ன செய்வது


Oviya Vijay
பிப் 22, 2025 14:15

நாதக யின் அஸ்தமனம் என்றைக்கோ ஆரம்பித்து விட்டது... தலைமையே பெண்கள் விஷயத்தில் வீக் என்று தெரிந்த பின் இனிமேலும் இவருடன் தொடர்ந்து நடைப்போட்டு தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ள யார் விரும்புவர்... கூடிய விரைவில் விஜயலக்ஷ்மியுடன் சமரசம் செய்து கொள்வார். இல்லையேல் சிறையில் கம்பி எண்ணுவார்... பெயர் கெட்டது கெட்டது தான். கட்சி மீண்டு எழ வாய்ப்பில்லை...


Muthu Kumar
பிப் 22, 2025 13:58

எந்த ஒரு கட்சி என்றாலும், ஒவ்வொரு தொண்டனும் முக்கியம் தான். கட்சி ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை மூலம் தொண்டனை நீக்குவது என்பது வேறு. தொண்டன் தானாக எளியேறுவது என்பது வேறு. 2 வது செயல் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விடும். தொண்டனை அரவணைத்து தான் செல்ல வேண்டும். நாதக செயல் பாடுகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் எடப்பாடி. அவர் என்ன உருண்டு புரண்டாலும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. தொடர் தோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. சீமான் இனியும் விழித்துக் கொள்ள வில்லை என்றால், நாதக தேய்பிறை தான்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 13:27

இந்த சீமான், முன்பு காளியம்மா வை பிசுறு என்றான். இப்போது களை என்கிறான். இதுக்கப்புறமும் அந்தம்மா இவனோட கட்சியில் தொடர்ந்தால் அதன் அர்த்தம், நாதக வை இயக்குவது சீமான் அல்ல, நாக்பூர் ஆர் எஸ் எஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.


Venkatesh
பிப் 22, 2025 16:57

தங்களது விசுவாசத்தை காட்ட கோபலபுர கொத்தடிமைகள் அவ்வப்போது தோன்றிய கருத்தை எழுதுவது வழக்கமாகிவிட்டது..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 13:20

நாதக வே ஒரு விஷ களைச் செடி தான். தமிழ் நாட்டின் தமிழ் மக்களின் எதிரி சீமான். ஈழத் தமிழர்களின் கல்வியை மறுத்து, இளைஞர் களின் வாழ்வை சிதைத்து ஈழத் தமிழ் இனத்தையே, இலங்கை தீவிரவாதி பிரபாகரன் அழித்த மாதிரி, சீமான் இந்திய தமிழ் இளைஞர்களின் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பவன். இந்த செயலுக்கு, இவனுக்கு ஆதிக்க வர்க்கத்தின் ஆசி இருக்கிறது.


நாஞ்சில் நாடோடி
பிப் 22, 2025 14:53

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தது தி மு க வும் காங்கிரசும் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை