மேலும் செய்திகள்
கொலை பட்டியல்
11-Aug-2024
19.8.24 முதல் 24.8.24 வரை சென்னை கோடம்பாக்கம் வரதராஜப்பேட்டை, மூப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் எட்வர்டு. தன்னை கேலி, கிண்டல் செய்யும் நபர்களை கண்டிக் காததால், மகன் சர்வின் அஜய்குமாரால் கொல்லப்பட்டார் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன், அதே பகுதியில், போதை பொருள் விற்ற மலாங் என்பவரை மிரட்டி, பணம் பறித்து வந்ததால் கொல்லப்பட்டார் சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த ரவுடி ஆசைத்தம்பி, மாமூல் கேட்டு மிரட்டியதால், அதே பகுதியில் தோழி வீட்டில் துாங்கிய போது, மர்ம நபர்கள் ஐந்து பேரால் கொடூரமாக கொல்லப்பட்டார் திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில், பிரச்னைக்குரிய இடத்தை, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக சமப்படுத்திய போது, அங்கு வந்த மர்ம கும்பலால், துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணராஜ் கொல்லப்பட்டார் சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் சாலை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த மணிவண்ணன், தன் மனைவி நாகம்மையுடன் மது அருந்தினார். அப்போது, மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த போது ஏற்பட்ட தகராறில், நாகம்மையால் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மணிவண்ணன் கொல்லப்பட்டார் கள்ளக்குறிச்சி மாவட்டம் புல்லுார் கிராமத்தைச் சேர்ந்த ரமணி என்ற வங்கி அதிகாரி, தன் இரண்டாவது கணவர் அசோக் என்பவரால், முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டார் கடலுார் மாவட்டம் வடலுாரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தாய் வீட்டிற்கு வந்தவர், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த, தன் ஐந்து மாத குழந்தையை கொன்று, கழிவுநீரில் வீசியுள்ளார் சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த காளிதாஸ், ஜெ.ஜெ.நகரில் நண்பர் மணிகண்டனுடன் மது குடித்தார். அப்போது தகராறு ஏற்பட்டு, மணிகண்டனால் கத்தியால் குத்தப்பட்டு காளிதாஸ் கொல்லப்பட்டார் சென்னை அம்பத்துார் காவல் நிலையம் அருகே, மூடிக் கிடக்கும் தனியார் தொழிற்சாலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, தன் தகாத உறவு காதலனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
11-Aug-2024