11.8.24 முதல் 17.8.24 வரை விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, கணபதி சுந்தர்நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூவையா, 47, பன்றி பண்ணை நடத்தி வந்தார். பூவையாவின் தோட்டத்தில் மாடு மேய்த்ததால் ஏற்பட்ட தகராறில் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார் சென்னை ஓட்டேரி பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சிராஜ், 30. கூலி தொழிலாளியான இவர், நண்பர்களுடன் தியேட்டரில் படம் பார்த்துள்ளார். அப்போது, சிராஜ் மீது, இவரின் நண்பர் இம்ரானின் கால் உரசி உள்ளது. இதை சிராஜ் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒன்றாக சேர்ந்து மது குடித்தபோது, இம்ரான் உள்ளிட்ட நால்வரால், சிராஜ் மர்ம உறுப்பு அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டார் சென்னை திருவொற்றி யூர் சத்தியமூர்த்தி நகர், வரதராஜ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 30. இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டார் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா, 33. ஆட்டோ ஓட்டுனரின் மனைவியான இவர், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், அவர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த, தன் ஏழு வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, எரியூர்திருத்தங்கல்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், 55, அதே பகுதியில் ஆடு மேய்த்த மனைவியை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டார் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, கொசவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், 44, நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில், உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே, கக்கன் நகரைச் சேர்ந்த மதியழகன், 39, மதிராஜா, 40, ஆகியோர், ஓடக்கரை என்ற இடத்தில் நடந்த கோவில் திருவிழாவில் வெட்டிக் கொல்லப்பட்டனர் சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி, 31வது தெருவைச் சேர்ந்த மீனா, 80, என்பவர், முரளி கிருஷ்ணன், 37, என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சத்தம் போட்டதால், மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.