உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த ஆண்டும் ரூ.1.05 லட்சம் கோடி கடன்; 10 லட்சம் கோடியை நெருங்கும் மொத்த கடன்

இந்த ஆண்டும் ரூ.1.05 லட்சம் கோடி கடன்; 10 லட்சம் கோடியை நெருங்கும் மொத்த கடன்

சென்னை:தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 41,637 கோடி ரூபாயாகவும், மொத்த கடன் 9.30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

வருவாய் வரவினங்கள்

 மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,894.58 கோடி வரி அல்லாத வருவாய் ரூ.28,818.58 கோடி  மத்திய வரியில் பங்கு ரூ.58,021.50 கோடி  மத்திய அரசு மானியம் ரூ.23,834.11 கோடி  மொத்த வருவாய் ரூ.3,31,568.76 கோடி

வருவாய் செலவினங்கள்

 ஊதிய செலவினம் ரூ.90,463.98 கோடி சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு செலவினம் ரூ.16,921.78 கோடி  ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூ கால பயன் ரூ.41,290.40 கோடி மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான செலவினம் ரூ.1,53,723.87 கோடி கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.70,753.99 கோடி மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3,73,203.69 கோடி வருவாய் பற்றாக்குறை ரூ.42,000 கோடிவருவாய் பற்றாக்குறை, 41,634.93 கோடி ரூபாயாக இருக்கும். வரி வசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாய் பெருக்கும் நடவடிக்கைகளை எடுப்பதால், 2026 - 27ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 31,282.23 கோடி ரூபாயாக குறையும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம், 3 சதவீதம்.

மொத்த கடன் ரூ.9 லட்சத்து 30,000 கோடி

தமிழக அரசு 2025 - 26ம் ஆண்டில், 1 லட்சத்து 62,096.76 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 55,844.53 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 2026 மார்ச் 31 அன்று நிலுவையில் உள்ள கடன், 9 லட்சத்து 29,959.30 கோடி ரூபாயாக இருக்கும்.தற்போது நிலவும் பொருளாதார சூழலில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இது நமக்கு சாதகமானதாகும்.நம் உயர் வளர்ச்சி வீதம், வரும் காலங்களிலும் தொடரும். நிதி ஆதாரங்களை பெருக்கியும், வரி வசூல் திறனை அதிகரித்தும், மாநிலத்தின் மொத்த வருவாயின் உயர் வளர்ச்சி வீதம் தக்கவைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அருண், சென்னை
மார் 15, 2025 20:49

TN முன்னேற்றத்துக்கு கடன் வாங்குவது ok அனா திருப்பி கொடுப்பது யார்? கடந்த 3 ஆண்டுகளில் என்ன முன்னேற்றத்தை கண்டது TN? சொல்லுங்க வேணுகோபால்?!


venugopal s
மார் 15, 2025 21:21

மத்திய பாஜக அரசு வாங்கியுள்ள நூற்று எண்பது லட்சம் கோடி ரூபாய் கடனை யார் அடைக்கப் போகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசின் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடனையும் அழைப்பார்கள்!


venugopal s
மார் 15, 2025 17:12

மாநிலங்கள் கடன் வாங்குவது என்பது மத்திய அரசாலும், ரிசர்வ் வங்கியாலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது. மத்திய அரசும் கடன் வாங்குகிறது. மாநில அரசு அதன் ஜி எஸ் டி பி என்று சொல்லப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவீதம் வரை வாங்க அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜி எஸ் டி பி அதிகம் மற்றும் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனால் அதிக கடன் வாங்கும் தகுதி உள்ளது.இரண்டாவது ஒவ்வொரு வருடமும் ஜிஎஸ்டிபி அதிகரிப்பதால் அந்தத் தகுதி அளவும் அதிகரிக்கிறது.ஆகவே கடன் தொகையும் அதிகரிக்கிறது. இந்த இருபத்தேழு சதவீதத்துக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள மாநிலங்கள் கேரளா, பஞ்சாப் ,சத்தீஸ்கர் ,ஆந்திரா போன்ற மாநிலங்கள். இந்த அளவை விடக் குறைவான அளவில் உள்ள மாநிலங்கள் குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்.இந்தியாவின் கடன் 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ஐம்பது லட்சம் கோடி ரூபாய் இப்போது நூற்று எண்பது லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது எப்படி என்றால் மாதம் ஐம்பதாயிரம் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வங்கிகள் அதிகபட்சமாக முப்பது லட்சம் ரூபாய் ஹவுசிங் லோன் கொடுப்பார்கள், அதேசமயம் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டுபவருக்கு அறுபது லட்சம் ரூபாய் கடன் கொடுப்பார்கள். அதனால் தமிழகம் திவாலாகி விடும் என்ற கவலை வேண்டாம்,நமது மாநில பொருளாதாரம் நன்றாகவே உள்ளது. கடைசியாக டாஸ்மாக் வருமானம் தமிழக வருமானத்தில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவுதான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் மது விற்பனை மூலம் வரும் மாநில அரசின் வருவாய் அதிகம்!


Velan Iyengaar, Sydney
மார் 15, 2025 16:46

அருணாச்சலம் படத்துல ஒரு மாதத்தில் 1 கோடி செலவு செய்ய வேண்டும் என்பதை போல இந்த உலக மகா மாடல் ஒரு மாதத்தில் ஒவ் ஒரு தலையிலும் 1 லட்சம் கோடி கடனை கட்டிவிட்டு செல்வர்


oviya vijay
மார் 15, 2025 16:36

இவர்களுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் இருப்பவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர்களின் கதி தான்


अप्पावी
மார் 15, 2025 13:11

இவனுங்களை நம்பி எந்த ஏமாளிகள் கடன் குடுக்குறாங்கோ?


Savitha
மார் 15, 2025 11:40

இன்னும் இன்னும் இலவசங்களை அறிவித்து, அள்ளி வீசுங்கள் முதல்வர் அவர்களே, 10 லட்சம் கோடி கடன் , 100 லட்சம் கோடி கடன் ஆகும் வரை , அயராமல் நம்ம முதல்வர் உழைத்து, நம்ம ஒவ்வொருத்தர் தலையிலும் கடன் சுமையை ஏற்றி , தமிழக மக்களை வாழ வைக்கும் வரை , நம்ம முதல்வர் ஓயாமல் உழைப்பார், தேர்தல் சமயத்தில் அவர்கள் வீசும் ஒரு சில ஆயிரங்களுக்காக தமிழர்கள் நாங்கள் எங்கள் ஓட்டை வாரி வழங்குவோம். நாடு உருப்பட்டு விடும்.........


SRITHAR MADHAVAN
மார் 15, 2025 10:13

Can u please confirm the % of Individual share in each allotment?ஒவ்வொரு ஒதுக்கீட்டிலும் தனிநபர் பங்கின் சதவீதத்தை உறுதிப்படுத்த முடியுமா?


orange தமிழன்
மார் 15, 2025 07:50

கடன் வாங்குவதில் தமிழகம் தான் முதலிடம்..... என்னா ஒரு வளர்ச்சி.....₹ 10 லட்சம் கோடி...... அம்மாடியோ.......ஒவ்வொருவரின் தலையுளும் கடனை ஏற்றி வைத்திருக்கிறார்கள் நம் அனுமதி இல்லாமல்.....அறிவார்ந்த வழுக்குரைஞர்களே யாராவது இதற்கு ஏதாவது வழக்கு தொடுக்க முடியுமா?????


தேவராஜன்
மார் 15, 2025 07:42

எல்லா முகரக்கட்டைகளிலும் ரவுடிக் களை சொட்டுகிறது.


அருண், சென்னை
மார் 15, 2025 07:17

சீனாக்காரனால நாம் கையை கழுவினோம் 2020ல், இப்போ இவர்கள் கொள்ளை அடிக்கிற காசுக்கு நாம் கடனாளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை