உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோகை மலை ஊராட்சி வணிக வளாகம் கடை ஏலம்: திமுக.வினர் தலையீடு

தோகை மலை ஊராட்சி வணிக வளாகம் கடை ஏலம்: திமுக.வினர் தலையீடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில் தோகைமலை பேருந்து நிலைய வளாகத்தில் 40 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.இந்த வணிக வளாகம் கடைகளுக்கான பொது ஏலம் இன்று மதியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி தலைமையில், துணைத் தலைவர் சக்திவேல், மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கந்தசாமி வார்டு உறுப்பினரின் கணவர் ஷாஜகான் ஆகியோர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது.தோகைமலை ஊராட்சி ஒன்றிய மண்டல மேலாளர் இந்திராணி பொது ஏலத்தை மேற்பார்வை செய்தார்.இந்த ஏலத்தில் ஒரு லட்சம் முன்பணம் செலுத்தி ஏழு நபர்கள் கடை ஏலம் எடுத்தனர். எண் 03 கடை ஏலம் ரூபாய் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கார்த்திகேயன் என்பவர் ஏலம் எடுத்தார்.மற்ற கடைகள் ஏலம் எடுக்க ஏலதார்கள் முன்வராததால் ஏலம் பின்னர் அறிவிக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.அரசு அலுவலகத்தில் நடைபெற்ற வணிக வளாக கடை ஏலத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கந்தசாமி, திமுக வார்டு உறுப்பினரின் கணவர் ஜாஜகான் ஆகியோர்கள் ஏலத்தை நடத்தினர்.ஊராட்சி மன்ற செயலாளர் ரமேஷ் ஏலதாரர்கள் கேட்ட தொகையை பதிவு செய்து வந்தார்.ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதார்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல முடியாத வகையிலும் போக்குவரத்து இடையூறாகவும் பொது மக்களுக்கு இடையூர் ஏற்படும் வகையில் கடை நடத்துபவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் ஆக்கிரம்பு செய்துள்ள கடைகளை முழுமையாக அகற்றிவிட்டு பொதுமக்களுக்கும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்படும் என கூறினார்.அரசு வணிக வளாகத்தின் பொது ஏலத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திமுக வார்டு உறுப்பினரின் கணவர்கள் தலையிடால் ஏலதாரர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.பொது ஈழம் மேற்பார்வையாளராக வருகை புரிந்த ஊராட்சி ஒன்றிய மண்டல மேலாளர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் வார்டு உறுப்பினர் கணவர்கள் தலையீடு குறித்து கண்டும் காணாமல் இருந்தது ஏலத்தாரில் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி