உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 12) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ

தங்கையை 'சீண்டிய' அண்ணன் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. டாக்டரிடம் அந்த சிறுமியை அழைத்துச் சென்றபோது, சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரிந்தது. இதுகுறித்து பெற்றோர் புகாரின்படி, கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, சிறுமியின் பெரியப்பா மகனான 17 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

'சில்மிஷ' நண்பர்கள் சிக்கினர்

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. நேற்று முன்தி னம் மாலை கடைக்கு சென்றவரை கடத்தி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் புகாரின்படி, சிறுமிக்கு தொந்தரவு தந்த அதே பகுதியைச் சேர்ந்த டூ வீலர் மெக்கானிக் முத்துக்குமார், 18, பிளஸ் 2 மாண வர்கள் இருவர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என ஆறு பேரை 'போக்சோ' சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

16 வயது சிறுமி கர்ப்பம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 28, இவர், 2019ல் எண்ணுாரில் தங்கி வேலை பார்த்தபோது, மனைவியின் தங்கையான, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் சிறுமி, ஆறு மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து எண்ணுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த விசாரணை, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஒன்பது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில், ராஜ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையாக, வாழ்நாள் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாகமூன்று ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ராஜ்குமார், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nagarajan D
மார் 13, 2025 13:35

சட்டம் தூங்குவதால் தான் குற்றங்கள் பெருகுகிறது... இந்த குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபட்டாலும் பெரியவர்கள் ஈடுபட்டாலும் தண்டனை ஒரே மாதிரி தான் இருக்கவேண்டும்... ஒரு பெண்ணை தவறான எண்ணத்தோடு அணுகும் அளவு தீய எண்ணம் உள்ளவனுக்கு எதற்கு கருணை....


Perumal Pillai
மார் 13, 2025 12:38

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள் -இல் பள்ளிக்கூட வாத்தியார்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .


shyamnats
மார் 13, 2025 11:25

வானிலை அறிக்கை மாதிரி பாலியல் குற்ற விபரங்கள். சரியான விசாரணைகளும், தீவிரமான தண்டனைகளும் இல்லாததால் இத்தகைய நிலவரம், கலவரம் ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் திமுகவினர் அறிக்கையோ, நாட்டில் தேனும் பாலும் ஓடுவதாகவும், அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் மாயத் திரையை ஏற்படுத்துகின்றனர். மக்கள் தான் 2026 ல் தீர்ப்பு வழங்க வேண்டும்.


orange தமிழன்
மார் 13, 2025 11:08

நம் மாநிலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.. சட்டமும் காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை பொது வெளியில் காட்சி படுத்த வேண்டும்.. அவர்களின் முகத்தை மூடிக்கொள்ள அனுமதிக்க கூடாது. திரும்ப திரும்ப இந்த குற்றங்கள் உயர்வதற்கு குற்றம் செய்பவர்களுக்கு காவல் துறையிடம் பயம் போய்விட்டது தான் காரணம். பெற்றோர்களும் தங்கள் மகன்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களின் பணி பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் இல்லை.. இதற்கு அரசாங்கமும் பொது மக்களும் அவர்களின் அறிவுரை மற்றும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும்..( சில களவாணி ஆசிரியர்களும் உண்டு. அதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் நாம் தவறாக எடை போட கூடாது)


Kanns
மார் 13, 2025 11:08

People DONT BELIEVE All


m.arunachalam
மார் 13, 2025 10:45

பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய ஆபத்தான அறியாமை தான் காரணம் . மனித உருவில் ..............


S.V.Srinivasan
மார் 13, 2025 10:24

தொலை காட்சி, வானொலி மற்றும் செய்தி தாள்களில் தினமும் வரும் வானிலை அறிக்கை போல் தமிழகத்தில் தினமும் போக்ஸோ வழக்கு கைதுகள் அறிவிப்புக்கு ஒரு புது சேனல் தமிழக அரசு உருவாக்கி விடலாம். ஒரு கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அரசு சுடாலினின் அரசு. ஹி ஹி .


சமீபத்திய செய்தி