உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்சோ வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ

இலங்கை அகதி சிக்கினார்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் இந்திரன், 24. இவர், சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில், இந்திரன் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஆபாசமாக பேசியவருக்கு 'கம்பி'

பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 55, இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், ஆபாச வார்த்தைகளை பேசி, பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மங்கலமேடு அனைத்து மகளிர் போலீசார் முத்துசாமி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தற்காலிக ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் பிரபு, 32: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வத்தார். கடந்த 21ம் தேதி அவர், ஏழாம் வகுப்பு மாணவியர், ஆறு பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வாணியம்பாடி மகளிர் போலீசார் பிரபுவை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

samvijayv
பிப் 26, 2025 18:25

தலைப்பு மிக புதுமையாக இருக்கே.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 15:49

//அரசு ஊக்கத்துடன் மனித வளங்களை வீணடித்து ஐ ஏ எஸ் அதிகாரிகளை வைத்து மேற்பார்வை செய்து சாராயம் விற்பது இல்லை.// கா பாஸ்கரன். சார் நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்? இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், காந்தி பிறந்த குஜராத் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், அரசு ஊக்கத்துடன் மனித வளங்களை வீணடித்து ஐ ஏ எஸ் அதிகாரிகளை வைத்து மேற்பார்வை செய்து தான் மது விற்கறார்கள். உ பி யில் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷனிலும் அரசாங்க மதுக்கடை. லக்னோ ஏர்போர்ட்டில் கூட உ பி மாநில அரசின் மதுக்கடை இருக்கிறது. அஹ்மதாபாத் ரயில் நிலையத்தின் எதிரிலும் ஏர் போர்ட்டிலும் கூட குஜராத் மாநில அரசின் மதுக்கடைகள் உள்ளன. சார்... இந்தியாவில் எங்கியுமே மது ஒரு அரசியல் விவாதப் பொருளே அல்ல. தமிழ் நாட்டில் மட்டும் தான். டெல்லி வரை மக்கள் இந்த செயலைப் பார்த்து, "அதென்ன தமிழ் நாட்டில் மட்டும் Drinks விற்க வேண்டாம் " என்கிறார்கள். நீ குடிக்க மாட்டியா, good, அதுக்காக எவனுமே குடிக்க கூடாது ன்னா அது foolishness.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 15:42

எனக்கு எங்க கவுன்சிலரைக் கூடத் தெரியாது, P. S. சார். அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவனா இருந்தால், எதுக்கு 4 வருஷத்துக்கு ஒரு ஊர் னு trasfer ஆகிண்டே இருந்தோம்? 11 ஆம் வகுப்பு முடிவதற்குள் 4 ஸ்கூல், 5 வீடு மாறினோம். 1.2 கிலோ தங்க ஒட்டியாணம் உட்பட 2000 கோடி சொத்து சேர்த்த ஜெயலலிதா வை, தமிழ் நாட்டுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்னு முட்டாள்தனமா ஒரு பிரதமர் சொல்றார். பிரதமரின் கட்சி, இந்தகொள்ளைக்கார ஜெயலலிதா வின் கட்சியோட கூட்டணி வைக்கத் தவிக்குது, கெஞ்சுது, மிரட்டுது, இன்னும் அடிக்கவில்லை. அது மட்டும் தான் பாக்கி. அதே போல, தகர பெட்டியோடு 2006 அல்லது 2007 ல், கோவை வந்து இறங்கிய அண்ணாமலையின் சொத்து எவ்வளவு? வீட்டுக்கு வாடகையே மாசம் 3.5 லட்சம் னு ஊர் முழுக்க தெரியும். மாசம் 7-8 லட்சம் அவருக்கு செலவு என்று அவரே சொல்றார். அப்போ வருமானம்?? கேட்டால், நண்பர்கள் தருகிறார்கள் என்கிறார். வருடம் 84-90 லட்சம் பெறுகிற அண்ணாமலைக்கு வருமான வரி எவ்வளவு தெரியுமா? இதெல்லாம் யோசித்து, இங்கே கேட்டால், நம்மை மதம் மாற்றி விடுவார்கள்.


SUBRAMANIAN P
பிப் 26, 2025 13:25

இதேபோல தினமலர் இன்னொரு வேலை செய்யமுடியுமா? கடந்த 60 வருடங்களில் தமிழகத்தில் அரசியலுக்கு வந்து MLA, MP ஆனவர்கள் பெயர்கள், கட்சி, முந்தைய சொத்து, தற்போதைய சொத்துக்கள் எவ்வளவு என்பதை சேகரித்து வெளியிட முடியுமா? முடியாது..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 13:55

வேண்டாத வேலை. மேலும் அதில் ஒன்றும் சட்ட விரோதம் என்று சொல்லவே முடியாது. உதாரணமா எங்க தாத்தா கோவை சாய்பாபா காலனி அருகில், 1966 ல் 10 சென்ட் வெறும் ரூ. 12500. அதாவது ஒரு சென்ட் ரூ. 1159 என்று வாங்கிப் போட்டிருந்தார். இப்போது அதன் விலை ஒரு சென்ட் 11 லட்சம். அதாவது என் தாயாரின் சொத்து மதிப்பு இப்போது 1.1 கோடி. அரசுக் கல்லூரி ஆசிரியைக்கு ஏது இவ்வளவு சொத்து என்றால்?? எங்க பாட்டியின் 24 சவரன் இன்னும் வங்கியில் இருக்கு. இதுக்கு பில் லும் கிடையாது. இதன் மதிப்பு ரூ. 14 லட்சம் ? எப்படி வாங்கினேன் னு கேட்டால்??


SUBRAMANIAN P
பிப் 26, 2025 14:44

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு Mr. வைகுண்டேசுவரன். நல்ல பசையுள்ள ஒரு அரசியல்வாதிக்கு ரொம்ப வேண்டப்பட்டவராயிருப்பீர் நீர் போல..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 12:58

எங்கெங்கோ குற்றவாளிகள் உருவாகி குற்றங்கள் செய்வதற்கும், அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம். குற்றம் புரிந்தவர்கள் அநேகமாக 48 மணிநேரத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப் படுகிறார்கள். இது தமிழ்நாடு காவல் துறை யின் சிறப்பு. ஆட்சியின் சிறப்பு. இது தான் நிஜம். உண்மை. குற்றங்கள் அதிகமாவதற்கும் அரசாங்கத்துக்கும் நிச்சயம் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. 7 கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாடு. இதில் சுமார் 3.5 கோடி பெண்கள். இவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கான்ஸ்டபிள் போடச் சொல்கிறீர்களா?? குற்றங்கள் குறைய வேண்டும். இல்லாமல் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது இங்கே எழுதுங்கள் பாப்போம்?? அனைவருக்கும் கல்வி வேண்டும். ஆனால் கல்வி நிலயங்களிலேயே குற்றங்கள் நடக்கின்றனவே? என்ன செய்யலாம்?? வேலைவாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. எவனும் வருவதில்லை. அம்பத்தூர், ஆவடி முதல், கோவை, திருப்பூர் வரை வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலைக்குப் போக மறுத்து, பெற்றோரின் உழைப்பில் வாழும் நீசர்களை என்ன செய்யலாம்? சமூக சிந்தனை உள்ளவர்கள் எழுதவும்.


SUBRAMANIAN P
பிப் 26, 2025 14:03

உன் வீட்டுல எதுவும் அசம்பாவிதம் நடக்கல... அதான் வாய்கிழிய பேசுற..


SUBRAMANIAN P
பிப் 26, 2025 14:04

ஆனா நீங்க திமுகவுக்கு ரொம்ப வக்காலத்து வாங்காதீங்க.. சமூக சிந்தனை உள்ளவராயிற்றே...


Kasimani Baskaran
பிப் 26, 2025 14:10

பொறுப்பற்ற கருத்து. எங்கும் அரசு ஊக்கத்துடன் மனித வளங்களை வீணடித்து ஐ ஏ எஸ் அதிகாரிகளை வைத்து மேற்பார்வை செய்து சாராயம் விற்பது இல்லை. அயலக அணி நிர்வாகியே போதை வஸ்து கடத்தலில் சிக்கினார். முழுக்க நனைத்து விட்டது. முக்காடு போட்டு பயனில்லை.


sridhar
பிப் 26, 2025 11:58

1940 களில் நம் முன்னோர்கள் செய்த தவறு . சிறு பொறியாக இருந்த போலி திராவிட விஷ நெருப்பில் எண்ணெய் ஊற்றி வளர்த்தது இன்று தமிழகத்தையே எரிக்கிறது .


Keshavan.J
பிப் 26, 2025 11:03

நாள் ஒரு மேனி பொழுதோரு வண்ணம் . என்ன கொடுமை சரவணா இது


Natarajan Ramanathan
பிப் 26, 2025 09:17

ஒருகாலத்தில் காஷ்மீரில் தினம் தினம் குண்டு வெடித்து பலியானோரின் தகவல் வந்ததை தீயசக்தி கிண்டல் செய்து பேசுவான். இப்போது அவன் மகன் ஆட்சியில் தமிழகத்தில் தினம் தினம் பாலியல் வழக்கில் கைது ஆனவர்கள் பற்றிய தகவல் வெளியாகிறது. கேவலமாக இருக்கிறது.


Kanns
பிப் 26, 2025 09:02

Atleast 50% Cases are False& Cookedup by CaseHungry Criminals. SACK& PUNISH All Judges NOT PUNISHING POWER-MISUSING RulingPartyGovts, CaseHungry Criminals esp Investigators-Police, Judges, NewsHungry BiasedMedia, VoteHungryPartiesMPs, PowerHungry Bureaucrats-Groups, VestedFalse ComplaintGangs women, groups/unions, SCs, advocates etc etc.All of them are GRAVELY Conspiratorial Criminals Against People& Nation. SHAMEFUL JUSTICE


சிவா. தொதநாடு.
பிப் 26, 2025 08:45

மகிழ்ச்சி திராவிட மாநகரின் வளர்ச்சியை கண்டு


சமீபத்திய செய்தி