உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழிக் கொள்கை விவகாரம்; புனிதர் போல நாடகமாடும் தி.மு.க.,; அன்புமணி குற்றச்சாட்டு

மும்மொழிக் கொள்கை விவகாரம்; புனிதர் போல நாடகமாடும் தி.மு.க.,; அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: 'தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தி.மு.க., அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்று பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பது குறித்த விவகாரத்தில் தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுவது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை போன்ற தமிழக நலன்களுக்கு எதிரான விஷயங்களில் தி.மு.க., அரசு தொடர்ந்து நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க விருப்பம் தெரிவித்து மத்திய பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சஞ்சய்குமாருக்கு கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி தமிழக அரசின் அன்றைய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இப்போது வீரமுழக்கமிடும் தி.மு.க., கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், 'தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கான வாக்குமூலம் தான் இது என்பதை புரிந்து கொள்ள வல்லுனர்களின் பொழிப்புரையெல்லாம் தேவையில்லை.அதுமட்டுமின்றி, அந்தக் கடிதம் மத்திய அரசுக்கு எழுதப்பட்டதன் நோக்கமே எப்படியாவது மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பது தான். அதற்காக அந்தக் கடிதத்தில், வல்லுனர் குழு பரிந்துரையைப் பெற்று 2024-25ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்; அதனால் 2023-24ம் ஆண்டுக்கான நிதியை எங்களுக்கு உடனே வழங்குங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட தொனியை வைத்துப் பார்த்தாலே பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டதை அறியமுடியும்.அதுமட்டுமின்றி, தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 16ம் நாள் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமின்றி, ''பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை 2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள். தமிழக மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தது.பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே தி.மு.க., அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இப்படியாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு 100% தயாராகி விட்ட தமிழக அரசு, இப்போது புனிதர்களைப் போல நாடகமாடுகிறது.மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தையும், நாடகத்தையும் மறைத்து விட முடியாது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான கடிதம் இரு ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதம் அல்ல; தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகும். அதில் உள்ள விவரங்களுக்கு தி.மு.க.,வினர் அவர்கள் விருப்பம்போல பொழிப்புரை எழுத முடியாது.தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அதை இல்லை என்று தமிழக அரசால் மறுக்க முடியுமா? தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தி.மு.க., அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய நாடகங்களை தி.மு.க., அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு கல்வித்துறையில் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும், பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Arumugam Kalaichelvan
மார் 13, 2025 22:04

கேவலமான கருத்து. வழக்குக்குப் பயந்து பிதற்றுகிறார்


vbs manian
மார் 13, 2025 10:00

இவருக்கும் ஹிந்தி காய்ச்சல் உள்ளது. இவர் சந்ததிகள் என்ன எங்கு படித்தார்கள் என்று சொன்னால் நல்லது. தமிழக அரசியல் வாதிகளுக்கு முடக்கப்பட்ட மாணவர் சமுதாயம் வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்ய கோடி கட்ட ஆட்கள் தேவை. மாணவன் நான்கையும் தெரிந்து முன்னேறிவிட்டால் இவர்களின் பருப்புவேகாது.


Ganesan S
மார் 13, 2025 00:05

தமிழ் நாட்டில் மைய அரசு அலுவலகங்களில் இரயில் வங்கித் துறை கட்டுமானத்துறை உட்பட வடக்கர்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் தனியார் CBSE மும்மொழிப் பள்ளிகளில் சேர வசதியில்லை வடமாநில கூலித் தொழிலார்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்று வருகிறார்கள் இவர்களுக்குத்தான் மைய அரசு பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறது வசதியானவர்கள் தமிழர்கள் உட்பட தமிழுக்கு பதிலாக வேறு அந்நிய மொழியை தேர்ந்தெடுக்கிறார்கள் உதாரணம் அமைச்சர் மகேஷ் பெய்யாமொழியின் மகன் இதற்குத் தீர்வு 1 தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்குவது 2 அனைத்து மத்திய அரசு வேலைகளிலும் 50% உள்ளுர் மக்களுக்கு ஓதுக்கீடு இந்த கண்டிஷன்களுக்கு மைய அரசு உடன் பட்டால் மாநில அரசு மைய அரசின் புதுக் கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ளலாம்....


Samuel
மார் 12, 2025 23:51

நாக்பூர் பிளான் என்றால் enna?


Anantharaman Srinivasan
மார் 12, 2025 22:49

சமயத்துக்கு தகுந்த மாதிரி இரட்டை நாக்கில் பேசுவதற்கு முதல்வருக்கு வெட்கமாயில்லை. விவரம் தெரிந்த மக்கள் காறித்துப்புவார்கள்..அதைவிட மல்லாந்து படுத்துக்கொண்டு தனக்குத்தானே எச்சில் துப்பிக்கொள்ளலாம்.


ஆரூர் ரங்
மார் 12, 2025 22:13

டாக்டர் உங்க மகள்களும் ஹிந்தி படித்ததாக கூறுகிறார்களே. தமிழும் கற்றுக் கொடுத்தீங்களா?


கண்ணன்,மேலூர்
மார் 12, 2025 23:49

யாரை நம்பினாலும் இந்த மேங்கோ பாய்ஸ்களை நம்பவே கூடாது சீட்டு கிடைக்கும் என்றால் எப்படி வேணாலும் பல்டி அடிப்பான்கள்


Appa V
மார் 12, 2025 22:01

புளகாங்கிதமா ? அது தானே தெரியும்


Oru Indiyan
மார் 12, 2025 21:27

அன்புமணி ஒருவர் தான் தைரியமாக பேசி இருக்கிறார். எடப்பாடி மூடி கொண்டு இருக்கிறார். கூட்டு களவாணிகள். கூட்டணி கும்பலை பற்றி கேட்கவே வேண்டாம். இதற்கு ஸ்டாலின் பதில் பேசுவதை விட அந்த தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தான் பதில் சொல்ல வேண்டும்


Ramesh Sargam
மார் 12, 2025 21:22

தமிழில் போக்கிரி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதே போக்கிரி தலைப்பில் வேறு ஒரு படம், இந்த திமுகவின் போக்கிரித்தனத்தை சித்தரித்து வெளிவரவேண்டும். தமிழக மக்களுக்கு திமுகவினர் போக்கிரித்தனம் தெரிய வேண்டும். திமுக 2026 தேர்தலில் தோற்கவேண்டும். திமுக ஒழியவேண்டும்.


கணேசன் சா
மார் 12, 2025 22:30

தமிழ் நாட்டில் மைய அரசு அலுவலகங்களில் இரயில் வங்கித் துறை கட்டுமானத்துறை உட்பட வடக்கர்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் தனியார் CBSE மும்மொழிப் பள்ளிகளில் சேர வசதியில்லை வடமாநில கூலித் தொழிலார்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்று வருகிறார்கள் இவர்களுக்குத்தான் மைய அரசு பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறது வசதியானவர்கள் தமிழர்கள் உட்பட தமிழுக்கு பதிலாக வேறு அந்நிய மொழியை தேர்ந்தெடுக்கிறார்கள் உதாரணம் அமைச்சர் மகேஷ் பெய்யாமொழியின் மகன் இதற்குத் தீர்வு 1 தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்குவது 2 அனைத்து மத்திய அரசு வேலைகளிலும் 50% உள்ளுர் மக்களுக்கு ஓதுக்கீடு இந்த கண்டிஷன்களுக்கு மைய அரசு உடன் பட்டால் மாநில அரசு மைய அரசின் புதுக் கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ளலாம்....


சோழநாடன்
மார் 12, 2025 21:14

//தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும், பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்// என்று பாமக தலைவர் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ் எல்லா பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ்க் கற்பிக்கப்படவில்லை. கற்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை இடைநிலை வாரியம் நிராகாரித்து விட்டது. மும்மொழியை ஏற்றுக்கொண்டு திமுக நாடகம் ஆடுவதாவே வைத்துக்கொள்ளுங்கள். மும்மொழியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்காமல் திமுக எதிர்ப்பு ஒன்றே உங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அன்புமணி ஐயா முடிந்தால் மத்திய அரசின் இடைநிலை வாரியத்தில் தமிழ்க் கற்பிக்கப் போராடினால் நல்லது.


Oru Indiyan
மார் 12, 2025 23:04

ஹிந்தி எங்கு திரிகிறார்கள்? மும்மொழி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகள் மூன்று மொழி படித்தால் உமக்கு ஏன் எரியுது.


Laddoo
மார் 13, 2025 01:47

கும்மிடிபூண்டிய தாண்டாத உங்கள் குடும்பம் இதுக்கெல்லாம் எதுக்கு கருத்து போடற 200 ரூவா வாங்குனோமா, சரக்கு அடிச்சோமா என்று இருந்துடுங்க


ஆரூர் ரங்
மார் 13, 2025 10:57

தமிழைப் படித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. அது ஒரு காட்டுமிராண்டி பாஷை, சனியன் என்று திராவிடத் தந்தை கூறியதால்தான் இடைநிலைக் கல்வி வாரியம் தமிழை கட்டாய பாடமாக்கவில்லை எனஎண்ணுகிறேன். . ஈவேரா கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை, கழகம் முழுக்க புறக்கணிக்கிறது என திமுக அறிவித்தால் ஒருவேளை மறுபரிசீலனை செய்வார்கள்.


சமீபத்திய செய்தி