உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழிபெயர்ப்பாளர் கா.செல்லப்பன் மறைவு

மொழிபெயர்ப்பாளர் கா.செல்லப்பன் மறைவு

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரும், பேராசிரியருமான கா.செல்லப்பன், 88; நேற்று காலமானார்.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கா.செல்லப்பன், புதுக்கோட்டை மன்னர் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராகவும், பாரதிதாசன் பல்கலையில் ஆங்கில இலக்கியத்துறை தலைவராகவும் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த இவர், தமிழ் நுால்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் வல்லவர் அதேபோல, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலிய கவிஞர்களின் கவிதைகளையும் மொழி பெயர்த்துள்ளார். இளங்கோவடிகள் -மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடக படைப்புத் தன்மையை ஒப்பியல் ஆய்வு செய்தார். ரவீந்திரநாத் தாகூரின், 'கோரா' நாவலை மொழி பெயர்த்ததற்காக, 2016ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவர் நேற்று, சென்னை அம்பத்துாரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ