உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து பணியாளர்கள் வரும் 18ல் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து பணியாளர்கள் வரும் 18ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.சம்மேளனத்தின் பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:போக்குவரத்து கழக ஊழியர்களின் பல்வேறு பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்கு வரத்து கழக தலைமை அலுவலகங்கள் முன், 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். 20,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுனர், நடத்துனர்களை தாக்குவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்