உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது

வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது

தேனி:விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெடி வெடிக்க வேண்டாம் என எச்சரித்த போலீசாரை தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்து கற்களால் தாக்கிய பொம்மையக கவுண்டன்பட்டி பள்ளி ஓடைத் தெரு கபிலன் 22, ஜீவா 20, ஆகிய இருவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.தேனி பொம்மையக் கவுண்டன்பட்டியில் செப்., 8 இரவில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. அப்போது தனியார் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை முன் கைதான இருவரும் வெடி வெடித்தனர். அதனை பார்த்த அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல்படை பெண் காவலா முத்துலட்சுமி, முதல் கிரேடு போலீஸ்காரா ஜெயராஜ், ஏட்டு வெற்றிவேல், முதல் நிலை பெண் போலீஸ்காரர் காமாட்சி ஆகியோர் வெடி வெடிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதனால் 3 ஆத்திரம் அடைந்த கபிலன், ஜீவா இருவரும் போலீசாரை தரக்குறைவாக பேசி, கற்களைக் கொண்டு எறிந்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்தனர். பின் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் இருவர் மீதும் அல்லிநகரம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன கொலை மிரட்டல் உடபட 5 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார். இதில் கைதான கபிலன் பெயரில் பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், ரவடி வரலாறு புத்தகம் பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி