உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி; தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி

தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி; தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி

நாமக்கல் : சேலம் மாவட்டம், வாழப்பாடி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னார், 31. இவர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துாரில் தேங்காய் வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் செல்வதற்காக, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூ--வீலரில், நாமக்கல்லில் இருந்து மோகனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, நாமக்கல் அடுத்த, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி அருகே, கணவாய்ப்பட்டி சாலையோரம், வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர், டூ-வீலரில் சென்ற பொன்னாரிடம் உதவி கேட்டார்.டூ-வீலரை நிறுத்திய பொன்னார், தன்னிடம் இருந்த தண்ணீர், இரும்புப் பொருட்களை கொடுத்து, வலிப்பு வந்த இளைஞருக்கு உதவினார். அப்போது, திடீரென வாலிபர்கள் இருவரும், பொன்னாரை தாக்கி அவரிடமிருந்து, 5,000 ரூபாய், மொபைல் போன் மற்றும் டூ-வீலர் சாவியை பறித்துக் கொண்டு, அவர்களின் டூ-வீலரில் நாமக்கல் நோக்கி தப்பிச் சென்று கொண்டிருந்தனர்.அதிர்ச்சியடைந்த பொன்னார், சாவி இல்லாத தன் டூ-வீலரை தள்ளிக் கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே, வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள் சென்ற டூ-வீலர், அங்குள்ள கல்லுாரி அருகே உள்ள சாலையோர மரத்தில் மோதியது. இதில், வாலிபர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு வாலிபரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.போலீசார் விசாரணையில், தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய போது விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த மாரி, 25, என்பதும், மற்றொருவர் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி பட்டறை கூலித்தொழிலாளி நவீன், 30, என்பதும் தெரிந்தது.வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள், சாலை விபத்தில் இறந்தது குறித்து, மோக னுார் மற்றும் நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Jai
ஜூன் 08, 2024 16:19

மக்கள் மத்தியில் எந்த விதமான moral values மற்றும் ஒழுக்கம் வந்துவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மக்கள் கண் போன போக்கிலே போக வேண்டும் மனம் போன போக்கிலே வாழ வேண்டும் என்று கட்சி கொள்கையுடன் இருப்பதால் இப்படி பிரச்சினைகள் வருகிறது. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான வித்தியாசம் குறைந்து சிறு கோடு ஆக ஆகிவிட்டது.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:09

சமச்சீர் கல்வி படித்தவர்களா இல்லையா?


Lion Drsekar
ஜூன் 08, 2024 11:47

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை . வந்தே மாதரம்


karupanasamy
ஜூன் 08, 2024 11:43

செத்த இருவரும் கழக கயவர்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 11:36

சூலுார் அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர், 27, என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.


Ra ja
ஜூன் 08, 2024 10:59

எதெற்கெடுத்தாலும் திராவிட மாடலை பேசாமல் நல்லதை விதையுங்கள் வெறுப்பை விதைக்காதீர் அனைவரும் உங்கள் பின்னால் வருவார்கள்


Sampath Kumar
ஜூன் 08, 2024 10:21

கடை தேங்காயை ஏடுத்து வலி பிள்ளையாருக்கு உடைத்தால் இப்படி தான் ஆகும்


Pandi Muni
ஜூன் 08, 2024 15:09

வலி இல்லை...வழி பிள்ளையார்


Pandi Muni
ஜூன் 08, 2024 15:10

வலி இல்லை..வழி பிள்ளையார்


பிரேம்ஜி
ஜூன் 08, 2024 09:35

அருமையான தண்டனை உடனே கிடைத்தது ஆச்சரியம். இதுபோல் லஞ்ச ஊழல் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளுக்கு நடந்தால் நல்லது.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 09:24

1.வலிப்பு வரும் போது இரும்பு சாவி போன்றவற்றை கொடுப்பது அறியாமை. அவற்றால் பலன் ஏதுமில்லை. 2. இது போன்ற திருடர்களின் வீட்டுக்கு புல்டோசர் அனுப்புவதில் தவறில்லை.


Senthoora
ஜூன் 08, 2024 14:50

புல்டோசர் அனுப்ப ஆதித்தியாவிடம் கேட்கணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 09:18

ஆன்மிகம் போற்றும் தமிழனை திராவிடத்தின் பெயரால் ஏமாற்றிப்பிழைக்கும் திராவிட மாடலைத் தண்டிக்கப்போவது யார் ????


மேலும் செய்திகள்